Kamal: இயக்குனருக்கு கமல் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்... வசூல் ராஜா எம்பிபிஎஸ் உருவானதன் பின்னணி

by sankaran v |   ( Updated:2024-11-11 03:05:45  )
vasool raja mbbs
X

vasool raja mbbs

முன்னாபாய் எம்பிபிஎஸ் என்ற இந்தி படத்தின் ரீமேக் தான் கமல் நடித்த வசூல் ராஜா எம்பிபிஎஸ். இந்தப் படத்தைத் தமிழில் ரீமேக் செய்வதற்கு முன்பு என்னென்ன அனுபவங்கள் கிடைத்தது என்று இயக்குனர் சரண் பகிர்ந்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க...

44 நாள்கள்

director saran

director saran

கமல் படத்துக்கு சைன் போட்டதுக்கு அப்புறம் அது நியூஸ் ஆகி வெளியே வந்தது. நிறைய போன் கால்ஸ். வாழ்த்துக்கள் சொல்லிக்கிட்டே இருக்காங்க. அதுக்கு அப்புறம் தான் அது எவ்வளவு பெரிய படத்துல நாம கமிட் ஆகியிருக்கோம்னு தெரிஞ்சது. இந்தப் படத்துக்கு கமல் சார் கொடுத்தது 44 நாள்கள். அதுக்குள்ள படத்தை எடுத்து முடிச்சிடணும்.

என்னை அரஸ்ட் பண்றாரு

Also read: Biggboss Tamil 8: சொதப்பிய விஜய் சேதுபதி!.. அடங்காத போட்டியாளர்கள்.. ‘கமலை கொண்டு வாங்க பாஸ்’..

பகல்ல வந்தா நைட் வரமாட்டாரு. நைட் வந்தா பகல்ல வர மாட்டாரு. அப்படி பேசி வச்சிருந்தாரு. கமல் சார் உங்க கிட்ட மட்டும் தனியா பேசணும்னு சொன்னார். அப்புறம் ஒரு சின்ன கான்பரன்ஸ் ஹால். அங்க ஒரு இடத்துல நான் உட்கார்ந்து இருக்கேன். அவர் அப்படியே எழுந்து நடந்து வர்றாரு. அவர் வந்ததும் நான் எழுந்துட்டேன்.

அப்படியே சுவருல மோதி நின்னுட்டேன். எனக்கு இருபுறமும் கைகளை சுவரில வச்சி என்னை அரஸ்ட் பண்ண மாதிரி நின்னுக்கிட்டாரு. அப்புறமா கமல் படத்தைப் பண்ணனும்கற ஆசைல வந்து மாட்டிக்காதீங்க. எனக்கு இந்தப் படத்து ரீமேக் பண்ணனுமான்னு ரெண்டாவது ஒரு எண்ணம் இருக்கு. எங்கூட பண்ணனும்னு ஆசைப்பட்டு மாட்டிக்கிட்டா மாதிரி ஆகிடக்கூடாது.

வசூல்ராஜா MBBS - கிரேசிமோகன்

crazymohan

crazymohan

நான் வேணா தயாரிப்பு தரப்புல பேசுறேன். வேறொரு கதையை ரெடி பண்ணிட்டு டைம் எடுத்துக்கலாம்னு சொன்னாரு. நான் சொன்னேன். இது ஒரு சூப்பரான கான்சப்ட். இதுல நீங்க நடிச்சா நல்லா ரீச்சாகும். கண்டிப்பா இதை வச்சி நல்ல படத்தை என்னால கொடுக்க முடியும்னு சொன்னேன்.

அதுக்கு அப்புறமா கதையோட சீரியஸ்னஸைக் கொஞ்சம் குறைக்கணும்கறதுக்காக கிரேசிமோகனை உள்ளே கொண்டு வந்து வசனம் எழுத வச்சாரு கமல். அப்படித்தான் வசூல்ராஜா MBBS உருவானது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பெரும் வரவேற்பு

Also read: Lucky baskar: 10 நாட்களில் லக்கி பாஸ்கர் செய்த மெகா வசூல்!.. 100 கோடி கிளப்பில் இணையுமா?…

2004ல் சரண் இயக்கத்தில் உருவான கமல் படம் வசூல் ராஜா எம்பிபிஎஸ். கிரேசிமோகனும், சரணும் இணைந்து திரைக்கதை எழுதினர். கமல், ஜெமினி மனோகர் இணைந்து தயாரித்துள்ளனர். கமல், சினேகா, பிரகாஷ்ராஜ், நாகேஷ் உள்பட பலர் நடித்த இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

பரத்வாஜ் இசையில் ஆழ்வார்பேட்டை ஆண்டவா, பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு ஆகிய பாடல்கள் மாஸ். படத்தில் மனிதாபிமானம்னு அழுத்தமான ஒரு மெசேஜ் இருக்கும். அதே நேரத்தில் அதை காமெடி கலந்து சொல்லி இருந்ததால் படம் சூப்பர்ஹிட் ஆனது.

Next Story