ஹிட் கொடுக்கலைனாலும் எம்ஜிஆர் முன்னிலையில் வெற்றிவிழாவை கொண்டாடிய கமல்! ஏன்னு தெரியுமா?
Actor Kamal: தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக ஒரு ஹீரோவாக பன்முகத்திறமை கொண்ட கலைஞராக மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த ஒரு அற்புத நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் கமல். அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்ற ஒரு பாடலால் ஒட்டுமொத்த தமிழக மக்களின் நெஞ்சங்களில் ஆணி போல் பதிந்தவர் அன்றிலிருந்து இன்று வரை மகா கலைஞனாக திகழ்ந்து வருகிறார்.
ஒவ்வொரு நடிகருக்கும் அவரின் 100வது படம் என்பது பெரிய லட்சியமாக இருக்கும். 100வது படத்தை எப்படியாவது வெற்றிப்படமாக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். அந்த வகையில் எம்ஜிஆருக்கு 100வது படமாக அமைந்தது ‘ஒளிவிளக்கு’. இந்தப் படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதுடன் வெற்றிப்படமாக அமைந்தது.
இதையும் படிங்க: வெங்கட் பிரபு தொடங்கி விட்டது… விஜய் ரூட்டையே ஃபாலோ செய்யும் ரஜினிகாந்த்… இந்த விஷயமுமா?
அதே போல் சிவாஜிக்கு 100வது படமாக அமைந்தது‘ ராகவேந்திரா’. ரஜினி தன்னுடைய 100வது படம் கண்டிப்பாக தான் குருவாக நினைக்கும் ராகவேந்திராவை பற்றிய படமாக இருக்க வேண்டும் என பிடிவாதம் பிடித்து இந்தப் படத்தில் நடித்தார். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் ரஜினிக்கு திருப்தியை கொடுத்ததாக அமைந்தது.
இவர்கள் வரிசையில் கமலுக்கு 100வது படமாக அமைந்தது ‘ராஜபார்வை’. இந்தப் படம் வசூல் ரீதியில் வெற்றிப்படமாக அமையவில்லை என்றாலும் கமல் இந்த படத்தில் 100 நாள் கொண்டாட்டத்தை எம்ஜிஆர் முன்னிலையில் சிறப்பாக கொண்டாடினாராம். பல கோடி நஷ்டம் அடைந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: டிரைவர் திருமணத்திற்கு பணம் கொடுத்த ரஜினி!.. அதுல சூப்பர்ஸ்டார் செஞ்சதுதான் ஹைலைட்!..
வெற்றிக் கொண்டாட்டத்தின் காரணத்தை பிரபல சினிமா தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் கூறினார். அதாவது ராஜபார்வை படத்தை ஒரு சாரார் கோலாகலமாக கொண்டாடினார்கள். அதனால் ஒரு திரையரங்கில் மட்டும் அந்தப் படம் 100 நாள் ஓடியதாம். அந்த வெற்றியை பறை சாற்றவே எம்ஜிஆர் முன்னிலையில் கமல் இந்த விழாவை எடுத்தாராம். அதோடு அந்த விழாவின் போது படத்தின் தயாரிப்பாளர்கள், டெக்னீசியன்கள் என அனைவருக்கும் உரிய மரியாதையையும் கொடுத்தாராம் கமல்.