கமல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து நடித்து 1992ம் வருடம் வெளியான திரைப்படம் தேவர் மகன். இந்த படத்தில் கமலின் அப்பாவாக சிவாஜி நடித்திருப்பார். மேலும், கவுதமி, ரேவதி, நாசர், காக்கா ராதாகிருஷ்ணன், வடிவேலு என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர்.
இப்படத்தை மலையாள பட இயக்குனர் பரதன் இயக்கியிருந்தார். இளையராஜாவின் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. குறிப்பாக இஞ்சி இடுப்பழகா பாடல் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. வெளிநாட்டில் வசிக்கும் கமல் அப்பாவை பார்க்க சொந்த ஊருக்கு வருவார்.
இதையும் படிங்க: தேவர் மகனில் கமல் செய்த சித்து வேலை!.. கண்டுபிடிச்சி திட்டிய சிவாஜி!.. நடந்தது இதுதான்!..
பரம்பரை பகையை மனதில் வைத்துக்கொண்டு வில்லன் நாசர் கமல் குடும்பத்தை பழிவாங்கவும், ஊர் மக்களை துன்புறுத்தவும் நினைப்பார். அப்பா சிவாஜியின் மறைவுக்கு பின் நாசரிடமிருந்து அந்த கிராமத்தை கமல் எப்படி காப்பாற்றுகிறார் என்பதைத்தான் கமல் காட்டியிருப்பார்.
இந்த படத்தில் கமல் அமைத்த திரைக்கதை பலராலும் பாராட்டப்பட்டது. பல இயக்குனர்களுக்கு இப்படம் பாடமாக இருந்தது. வன்முறையை கையில் எடுக்கக்கூடாது என நினைக்கும் கமலை கோபப்படுத்தி கடைசியில் அரிவாளை எடுக்க வைத்து கொலையும் செய்யும் வைக்கும் வேடத்தில் நாசர் அற்புதமாக நடித்திருப்பார்.
இதையும் படிங்க: கொஞ்ச நஞ்ச பேச்சா? சத்தமே இல்லாமல் 21 வருடங்கள் கடந்து ‘தேவர் மகன்’ படம் செய்த சாதனை!
இப்படத்தின் இறுதிக்காட்சியில் நாசரின் தலையை வெட்டிவிட்டு அழுதுகொண்டே கமல் ‘புள்ளக்குட்டிய படிக்க வைங்கடா’ என சொல்லிக்கொண்டே செல்வார். அந்த வசனம் இப்போதும் பலராலும் சொல்லப்பட்டு வருகிறது. அப்போது நாசரின் அம்மாவாக நடித்த எஸ்.என்.லட்சுமி அழுவது போல் ஒரு காட்சி வரும். அதில் அவர் அற்புதமாக நடித்திருப்பார். இந்த காட்சி சிறப்பாக வந்ததில் இயக்குனருக்கு முழு திருப்தி.
ஆனால், இந்த காட்சியை மறுபடியும் எடுப்போம் என சொல்ல இயக்குனரோ நன்றாகத்தானே வந்திருக்கிறது’ என சொல்ல ‘எனக்காக ப்ளீஸ்’ என சொல்லிவிட்டு எஸ்.என்.லட்சுமியின் காதில் ஒன்றை சொல்லிவிட்டு கமல் மீண்டும் நடித்துள்ளார். அப்போது எஸ்.என்.லட்சுமி ‘நான் கொடுத்த பாலெல்லாம் ரத்தமா போகுதே’ என வசனத்தை பேசி நடித்தார்.
இதைக்கேட்ட படக்குழுவினருக்கு புல்லரித்து போனதாம். ஆன் தி ஸ்பாட்டில் கூட வசனத்தை மாற்றுவதில் கமலை யாராலும் அடிச்சிக்க முடியாது என இந்த சம்பவத்தை சொல்லி நாசரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: சிவாஜியின் நடிப்பை பார்த்து கடுப்பான இயக்குனர்! ‘தேவர்மகன்’ படத்தில் இப்படியெல்லாம் நடந்திருக்கா?
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…