Connect with us
kamal

Cinema News

எஸ்.கே.வுக்காக கமல் எடுக்கும் பெரிய ரிஸ்க்!.. எங்க போய் முடியுமோ தெரியலயே!..

Amaran: சினிமாவில் ரிஸ்க் என சொல்வதை விட சினிமாமே ரிஸ்க்தான் என சொல்ல வேண்டும். பல கோடி பட்ஜெட்டுகளில் ஒரு தயாரிப்பாளர் ஒரு படத்தை தயாரிக்கிறார். திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடந்து முடிந்து மற்ற வேலைகள் நடக்க வேண்டும். யாரிடமும் எந்த பிரச்சனையும் இல்லாமல் படம் ரிலீஸ் ஆக வேண்டும்.

அப்படியே ரிலீஸ் ஆனாலும் நிறைய தியேட்டர்கள் கிடைக்க வேண்டும். அப்படி கிடைத்தாலும் படம் ரசிகர்களுக்கு பிடித்து வெற்றி பெற வேண்டும். எந்த தயாரிப்பாளர்களும் சொந்த பணத்தை போட்டு படம் எடுப்பதில்லை. ஒரு பைனான்சியரிடம் வட்டிக்கு பணம் வாங்கியே படம் எடுக்கிறார்கள். அதனால்தான் சினிமா தயாரிப்பதில் ரிஸ்க் அதிகம்.

அதனால்தான் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் கடந்த பல வருடங்களாகவே பட தயாரிப்பில் ஈடுபடவில்லை. ஆனால், விக்ரம் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்து 400 கோடிக்கும் மேல் லாபம் வரவும் மீண்டும் தயாரிப்பு நிறுவனத்தை தூசி தட்டினார் கமல். சிம்புவை வைத்து ஒரு படம், சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் என ஆரம்பித்தார்.

kamal

இதில், சிம்பு படம் ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் டேக் ஆகவில்லை. ஆனால், சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் துவங்கியது. ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கினார். இந்த படத்தில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு அமரன் எனவும் தலைப்பு வைத்தனர்.

முற்றிலும் புதிய தோற்றத்தில் எஸ்.கே நடித்திருக்கும் இப்படத்தின் டிரெய்லர் வீடியோவும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த படம் 120 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. துவக்கத்தில் யுடிவி நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்தது. ஆனால், சில காரணங்களால் அந்நிறுவனம் விலகிக்கொண்டது.

இப்போது படம் முடிந்துவிட்டது. 120 கோடிக்கு மேல் எப்படி வியாபாரம் செய்வது என்கிற பயத்தோடு முழு படத்தையும் பார்த்த கமலுக்கு படம் மிகவும் பிடித்துப்போய்விட்டதாம். எனவே, ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே இப்படத்தை நேரடியாக வினியோகம் செய்ய திட்டமிட்டிருக்கிறது. எனவே, வினியோகஸ்தர்கள் இல்லாமல் இப்படம் நேரிடையாக தியேட்டருக்கு செல்லவிருக்கிறது.

இதையும் படிங்க: விஜய் சேதுபதியை தூக்கிட்டு சூரிய போடு!.. வெற்றிமாறன் போட்ட ஸ்கெட்ச்!..

google news
Continue Reading

More in Cinema News

To Top