கமல் நடிக்க வேண்டிய படத்தில் ரஜினி!.. சூப்பர்ஸ்டாருக்கு ஒரு கிளாசிக் படம் மிஸ் ஆகி இருக்கும்!..
ரஜினி சினிமாவில் நடிக்க வந்தபோது கமல் ஒரு ஸ்டாராக இருந்தார். பாலச்சந்தர் அறிமுகம் செய்ததால் அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சி, நினைத்தாலே இனிக்கும் என பல படங்களிலும் கமலின் நண்பராகவே ரஜினி நடித்தார். எனவே, ஹீரோவுக்கான சம்பளத்தை தயாரிப்பாளர்கள் இருவருக்கும் பிரித்து கொடுத்தனர்.
இது கமலுக்கு பிடிக்கவில்லை. ரஜினியிடம் சென்று ‘இனிமேல் நாம் சேர்ந்து நடிக்க வேண்டாம். தனித்தனியாக நடித்து முழு சம்பளத்தை வாங்குவோம்’ என சொல்ல ரஜினியும் அதை ஏற்றுக்கொண்டார். துவக்கத்தில் ரஜினிக்கு வந்தது எல்லாமே நெகட்டிவ்வான வேடங்கள்தான்.
இதையும் படிங்க: விஷாலை ஹீரோவாக்க போடப்பட்ட பக்கா மாஸ்டர் ப்ளான்! இப்படி யாரும் யோசிச்சிருக்க மாட்டாங்க
தப்புத்தாளங்களில் படத்தில் கூட அவரின் வேடம் அப்படித்தான் இருந்தது. ஆனால், பைரவி திரைப்படம் ரஜினியை ஹீரோவாக மாற்றியது. இந்த படத்திற்கு முன் ரஜினி நடித்த திரைப்படம்தான் புவனா ஒரு கேள்விக்குறி. இப்படத்தை இயக்கியது எஸ்.பி.முத்துராமன். இப்படத்தின் கதையை எழுதிய பஞ்சு அருணாச்சலம். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
இந்த படத்தை முதலில் இயக்கவிருந்தது எஸ்.பி.முத்துராமன் இல்லை. பஞ்சு அருணாச்சலம் எழுதிய அந்த கதையை ஏற்கனவே இயக்குனர் ஆர்.சி.சக்தி படித்திருந்தார். அவருக்கு இந்த கதை பிடித்துப்போக கமலை வைத்து படத்தை எடுக்க முன்வந்தார். எம்.ஜி.ஆரை சினிமாவில் அறிமுகம் செய்த ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க முன்வந்தது.
இதையும் படிங்க: அண்ணன் வரார் வழி விடு… புஷ்பா2 படத்தை அசால்ட்டாக தட்டி தூக்கிய கோட்…
ஆனால், என்ன காரணத்தினாலோ இப்படத்தில் நடிக்க கமல்ஹாசன் ஆர்வம் காட்டவில்லை. எனவே, இப்படத்தை இயக்கும் முடிவை அவர் கைவிட்டார். அதன்பின், எஸ்.பி.முத்துராமன் இயக்குவது என முடிவானதும் சிவக்குமார் ஒரு வேடத்திலும், ரஜினி ஒரு வேடத்திலும் நடிப்பது என முடிவானது.
அதன்பின் சிவக்குமார் நடிக்கவிருந்த வேடத்தில் ரஜினி நடிப்பது எனவும், ரஜினி நடிக்க வேண்டிய வேடத்தில் சிவக்குமார் நடிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. இது சிவக்குமாருக்கு பிடிக்கவில்லை. ஆனால், எஸ்.பி.முத்துராமன் அவரை சம்மதிக்க வைத்து இப்படத்தில் நடிக்க வைத்தார்.