கமல்கிட்ட கோச்சிக்கிட்டு போனது தப்புதான்..! அதை சரி செய்ய இதுதான் செய்தேன்… பிரபல இயக்குனர் சொன்ன ரகசியம்..!

Published on: November 3, 2023
---Advertisement---

Kamal Hassan: தமிழ் சினிமாவில் கமல்ஹாசனுக்கு எப்போதுமே தற்பெருமை என்பதே இருக்காது என்பது கோலிவுட் அறிந்த உண்மை தான். அந்த விஷயத்தினை மீண்டும் ஒரு முறை ஒரு உதாரணம் வெளியாகி நிரூபித்து இருக்கிறது. அதுகுறித்த சுவாரஸ்ய தகவலை அந்த இயக்குனரே வெளிப்படையாக கூறி இருக்கிறார்.

பிரபல இயக்குனர் சேரன் தன்னுடைய கேரியரில் பல இயக்குனர்களுக்கு உதவியாகவும், அசோசியேட்டாகவும் பணிபுரிந்து இருக்கிறார். அப்படி ஒருமுறை கமலின் மகாநதி படத்திலும் பணிபுரிந்து வந்தார். அப்போது ஒரு சீனுக்கு லேட்டாக வந்த அசோசியேட்டை இயக்குனர் சந்தான பாரதி திட்டி விட்டாராம்.

Also Read

இதையும் படிங்க: வீட்டுக்கு வந்த அண்ணாமலை கொடுத்த திடீர் ட்விஸ்ட்… முத்துவையே லாக் செஞ்சிட்டீங்களே..!

இதனால் அங்கு அசோசியேட்டாக இருந்த சேரன் கோபத்தில் வேலையே வேண்டாம் எனச் சொல்லி கிளம்பிவிட்டாராம். இதையடுத்து தன்னுடைய சமீபத்திய பேட்டியில் சேரன் அந்த விஷயம் குறித்து மனம் திறந்து இருக்கிறார். அதற்கு கமல் செய்ததையும் சொல்லினார்.

அந்த படப்பிடிப்பில் இருந்து கோபித்து கொண்டு வெளியேறியது தப்பு தான். அதற்கு பிறகு பாரதி கண்ணம்மா படத்தின் நிகழ்ச்சி ஒன்றுக்கு பத்திரிக்கை அடித்து கமல் சாரை பார்க்க போனேன். அப்போ அவருக்கு எந்த வித கோபமும் இல்லை. 

இதையும் படிங்க: பிரபுகூட நடிச்சிருக்கீங்களா? அப்போ வேணாம் – பாலசந்தர் படத்தில் நல்ல ஒரு கேரட்ரை தவறவிட்ட நடிகை