Connect with us
kamal_main_cine

Cinema News

‘விக்ரம்’ புகழ் கண்ண மறைச்சிருச்சோ என்னவோ?..இளம் நடிகருக்கு கொடுத்த வாக்குறுதியை தண்ணீல விட்ட கமல்!..

சினிமாவில் தற்போதுள்ள இளம் நடிகர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக விளங்குபவர் நடிகர் கமல்ஹாசன். இவரின் நடிப்பில் வெளியான விக்ரம் படம் சக்க போடு போட்டது. மேலும் அனைவரையும் அன்னாந்து பார்க்க வைத்த படமாக கமலுக்கு விக்ரம் படம் அமைந்தது.

kamal1_cine

தற்போது இந்தியன் – 2 படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார் கமல். அது போக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அதையும் தாண்டி தன்னுடைய ராஜ்கமல் புரடக்‌ஷன் மூலம் படங்களை தயாரிக்கும் பணியிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இதையும் படிங்க : அந்த சீன கண்டிப்பா சம்மதிக்க மாட்டாங்க!..மாஸ்டர் மைன்டோட யோசிச்ச எம்.ஜி.ஆர்!..வாயடைத்து நின்ன படக்குழு!..

kamal2_cine

யாரும் எதிர்பார்க்காத வெற்றியை பதிவு செய்த விக்ரம் படத்திற்கு பின் தன்னுடைய ராஜ்கமல் மூவிஸ் மூலம் விஜய், சூர்யா, சிம்பு, சிவகார்த்திகேயன் என முன்னனி நடிகர்களை வைத்து படம் பண்ணுவதாக அறிவித்தார்.மேலும் சில நடிகர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

kamal3_cine

ஆனால் உலகமே பார்க்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மேடையில் பகிரங்கமாக ஒரு அறிவிப்பை வெளியிட் டார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலம் வாய்ந்த போட்டியாளராக விளங்கியவர் தர்ஷன். அவரை வெளியேற்றும் போது கமல் ‘என்னுடைய ராஜ்கமல் படத்தில் தர்ஷனை நடிக்க வைக்க வாய்ப்பு தரப்படும்’ என வெளிப்படையாக கூறினார். ஆனால் இன்று வரை அந்த வாய்ப்பு வழங்கப்பட்டதாக தெரியவில்லை. அவர் பெரிய நடிகர்களை நடிக்க வைக்கும் முயற்சியில் தான் இருக்கிறாரே தவிர தர்ஷன் இருப்பதையே மறந்திருப்பார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top