More
Categories: Cinema History Cinema News latest news

பாடல் இல்லைனா என்ன?… வேற மாதிரி எடுக்கலாம்!… கமல் சொன்ன ஒத்த ஐடியாவால அசந்து போன இயக்குனர்…

Kamalhaasan: கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவரை நடிப்பின் சிகரம் என்றே கூறலாம். அந்த அளவு சினிமாவில் தனது நடிப்பினை வெளிக்காட்டியவர். இவர் தனது குழந்தை பருவம் முதலே சினிமாவில் நடித்துவருகிறார்.

களத்தூர் கண்ணாம்மா திரைப்படத்தில் இவரின் நடிப்பை கண்டு வியக்காதவர்களே கிடையாது. அபூர்வ ராகங்கள், 16 வயதினிலே போன்ற திரைப்படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். பின் பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்களிடையே பிரபலமானார். இவர் தசாவதாரம், உத்தம வில்லன் போன்ற பல்வேறு திரைப்படங்களின் மூலம் உலகநாயகனாகவே வலம் வந்தார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம்தான் விக்ரம். இப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

Advertising
Advertising

இதையும் வாசிங்க:இதனால் தான் கலாபவன் மணி இறந்தார்.. 6 வருடத்துக்கு பின்னர் வெளியான ஷாக் தகவல்..!

இவர் இடையில் அரசியல் மீது ஆர்வம் கொண்டு அரசியலிலும் குதித்தார். ஆனால் சினிமாவையும் கவனித்து அரசியலிலும் அவரால் ஈடுகட்ட முடியவில்லை. இருந்தாலும் தொடர்ந்து அரசியலிலும் முயற்சிகளை போட்டு கொண்டுதான் வருகிறார்.

இவரை நடிப்பின் அரக்கன் என்றே கூறலாம். இப்படியும் ஒரு மனிதர் நடிக்க முடியுமா என்பதற்கிணங்க சினிமாவில் இவர் ஆற்றிய அற்புதங்கள் பல. இவர் நடிகர் மட்டுமல்லாமல் நடனம் இயக்கம் என பலவற்றிலும் கைதேர்ந்தவர். இவர் நடிப்பில் 1982ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் சிம்லா ஸ்பெஷல். இப்படத்தினை இயக்குனர் முக்தா ஸ்ரீனிவாசன் இயக்கியிருந்தார்.

இதையும் வாசிங்க:வேற படமா வெளிவந்த விஜயகாந்தின் ‘அக்கா புருஷன்’ – இதுக்கு பின்னாடி இவ்வளவு கதை இருக்கா?!..

அப்போது இப்படத்தின் பாடல் படபிடிப்பிற்காக படக்குழுவினர் சிம்லாவிற்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு மிகக்கடுமையான குளிர் நிலவியுள்ளது. அந்த குளிரில் படத்தின் பிளே பேக் மிஷின் வேலை செய்யவில்லையாம். ஆனால் இயக்குனரோ கண்டிப்பாக பாடலை எடுத்தே ஆகவேண்டும்மெனும் முடிவில் இருந்துள்ளாராம்.

உடனே கமல் அப்படத்தின் உதவி இயக்குனரை அழைத்து பாடல் பாடாவிட்டால் என்ன? பாடலை பின்புறத்தில் ஒளிக்க விடுங்கள்… உதட்டசைவு இல்லாவிட்டால் என்ன?… இவ்வளவு தூரம் வந்துவிட்டோம் அல்லவா என கூறினாராம். உடனே இயக்குனர் இது கூட நல்ல ஐடியாவாகதான் இருக்கிறது என கூறி பின் வாயசைவு இல்லாமல் பாடலை எடுத்தார்களாம். அப்பாடல்தான் Look Love me Dear… பாடல். இப்படி கமல் அன்று நிற்கவிருந்த படபிப்பை நடக்க வைத்தாராம்.

இதையும் வாசிங்க:அப்போ ரஜினியை சரியாக கவனிக்கல!.. இப்போ வருத்தப்படுறேன்!.. புலம்பும் இயக்குனர்…

Published by
amutha raja

Recent Posts