சூர்யா மட்டுமில்ல.. கமலிடம் வாட்ச் கிப்ட் வாங்கிய வேற 3 நடிகர்கள் இருக்காங்க!.. வாங்க பார்ப்போம்...

by சிவா |   ( Updated:2024-01-16 05:04:30  )
kamal
X

kamal: திரையுலகில் தனக்கு லாபத்தை கொடுத்த இயக்குனருக்கு ஒரு தயாரிப்பாளர் அவர் விரும்பியதை வாங்கி கொடுப்பது என்பது பல வருடங்களாக நடந்து வருகிறது. சில தயாரிப்பாளர்கள் அதை செய்வார்கள். அதேபோல், சில நடிகர்கள் தனக்கு ஹிட் கொடுத்த இயக்குனருக்கு பைக் அல்லது கார் என எதாவது ஒன்றை பரிசாக கொடுப்பதும் சில சமயங்களில் நடிக்கும்.

இதை துவங்கி வைத்தவர் அஜித். வாலி படம் ஹிட் அடித்ததால் அப்பட இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு கார் ஒன்றை பரிசாக வாங்கி கொடுத்தார். அதற்கு முன்பே பைக் வாங்கி கொடுத்தார். அதன்பின் சில நடிகர்கள் இதை போல் இயக்குனர்களுக்கு வாங்கி கொடுத்தனர். சிங்கம் 3 ஹிட் அடித்ததால் இயக்குனர் ஹரிக்கு கார் ஒன்றை பரிசாக கொடுத்தார் சூர்யா.

இதையும் படிங்க: நடிகைக்கு நள்ளிரவில் கால் செய்து அழைத்த தனுஷ்!… விவாகாரத்து செய்து துரத்திய கணவர்!…

அதேபோல், ரஜினிக்கு ஒரு படம் பிடித்துப்போனால் அந்த பட இயக்குனரை பாராட்டுவார். சிலருக்கு பரிசும் கொடுப்பார். இயக்குனர் சேரனுக்கு தங்க சங்கிலி ஒன்றையும் அவர் பரிசளித்திருக்கிறார். ஆனால், கமல்ஹாசனை பொறுத்துவரை அப்படி யாருக்கும் அவர் எதுவும் கொடுத்தது இல்லை என்றுதான் பலரும் நினைக்கிறார்கள்.

ஆனால், அதில் உண்மையில்லை. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படத்தில் ரோலக்ஸ் எனும் கேமியோ வேடத்தில் நடித்திருந்தார் சூர்யா. இந்த படத்தின் வெற்றிக்கு அதுவும் ஒரு காரணமாக இருந்தது. கமலின் மீது இருக்கும் மரியாதையில் அப்படத்தில் நடித்ததற்காக அவர் சம்பளம் எதுவும் வாங்கவில்லை.

இதையும் படிங்க: சந்திரமுகி இயக்குநர் ரூமுக்கு அழைத்தார்!.. ஷூட்டிங்கில் இப்படியா பண்ணுவாங்க! லட்சுமி மேனன் ஃபீலிங்.

எனவே, கமல் அவரை நேரில் அழைத்து ஒரு விலை உயர்ந்த வாட்ச் ஒன்றை அவருக்கு பரிசாக கொடுத்தார். இது மட்டும்தான் வெளியே தெரிந்தது. ஆனால், சூர்யாவுக்கு முன் 3 பேர கமலிடம் வாட்ச்சை பரிசாக வாங்கியுள்ளனர். தெனாலி படத்தில் நடித்தபோது ஜெயராமுக்கு வாட்ச் ஒன்றை கமல் பரிசளித்திருக்கிறார்.

அதேபோல், சதிலீலாவதி படத்தில் கமலுடன் நண்பராக நடித்த ரமேஷ் அரவிந்துக்கு கமல் வாட்ச் ஒன்றை பரிசளித்திருக்கிறார். மேலும், ஹேராம் படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்த ஷாருக்கான் சம்பளம் வேண்டாம் என மறுத்துவிட்டார். அவரின் அன்பில் நெகிழ்ந்துபோன கமல் அவருக்கு ஒரு வாட்ச்சை பரிசாக கொடுத்திருக்கிறார்.

இதையும் படிங்க: பிரசாந்துக்கு மரியாதை கொடுத்து அஜித்தை அசிங்கப்படுத்திய வைரல் புகைப்படம்!.. உண்மையில் நடந்தது என்ன?

Next Story