ஆரம்பிக்கலாமா?..தளபதி -67ன் தரமான சம்பவம்!..பி.பியை எகிற வைக்கும் லோகேஷ்!..
தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில் அனைவரின் புருவத்தையும் உயர்த்தும் அளவிற்கு வியந்து நின்றவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். எடுத்தது 4 படங்களாயினும் தனித்துவமான கதைகளத்துடன் மக்களை ரசிக்க வைத்தவர் லோகேஷ். தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றி கொடுத்து மிகவும் தேடப்படும் இயக்குனர்களின் பட்டியலில் முக்கிய இடம் பிடித்தார் லோகேஷ்.
விக்ரம் வெற்றி
மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்திருந்தாலும் கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்கி தமிழ் சினிமாவிற்கே ஒரு பெருமை தேடிக் கொடுத்தார் லோகேஷ். அந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
அந்த பட வெற்றி லோகேஷை இந்திய அளவில் கொண்டு போய் சேர்த்தது. அடுத்ததாக இவர் இயக்க விஜய் நடிப்பில் தளபதி - 67 படம் தயாராக உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படம் ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.
இதையும் படிங்க : கிசுகிசுவை உண்மையாக்கிய ஸ்ரீவித்யா!..யாரையும் பாக்க அனுமதிக்காதவர் கமலை மட்டும் அழைத்ததன் பின்னனி!..
வில்லன்கள் ஆதிக்கம்
விஜய்க்கு வில்லனாக ஏகப்பட்ட நடிகர்கள் களமிறங்க காத்திருக்கிறார்கள். ஏற்கெனவே மலையாள நடிகர் பிரித்விராஜ், நிவின் பாலி, ஹிந்தி நடிகர் சஞ்சய் தத், நடிகர் விஷால் போன்றோர் நடிக்க உள்ளதாக தினந்தோறும் தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இதற்கிடையில் விஜய் வாரிசு படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் அந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்ததும் லோகேஷுடன் இணைய இருக்கிறார்.
ஏற்கெனவே விஜய் லோகேஷ் கூட்டணியில் மாஸ்டர் திரைப்படம் வசூல் அள்ளியதால் அடுத்ததாக இணைய இருக்கும் தளபதி-67 படத்தை எதிர்பார்த்து அனைவரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தளபதி -67 படத்தில் நடிக்கும் நடிகர்களின் பட்டியல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் தளபதி - 67ல் கேமியோ ரோலில் ஒரு உச்ச நடிகரிடம் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தளபதி - 67 கேமியோ
இதையும் படிங்க : ரெட் ஜெயண்டை இவனுங்க கிட்ட இருந்து முதல்ல காப்பாத்தனும்!..விஷால் , ஆர்யாவை பாத்து மிரண்டு போன உதய நிதி!..அப்படி என்ன பண்ணாங்க?..
அந்த நடிகர் வேறு யாருமில்லை. உலக நாயகன் கமல்ஹாசன் தான். ஏற்கெனவே கமலை தெய்வத்திற்கும் மேலாக கருதிக் கொண்டிருக்கும் லோகேஷ் விஜயின் படத்தில் கேமியோ ரோலில் நடிக்க கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷிற்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் கமல் இதை செய்யாமல் இருப்பாரா என்ன? பொறுத்திருந்து பார்ப்போம்.