முதல் படத்திலேயே சோலோ டைட்டில் கார்டா? - ‘களத்தூர் கண்ணம்மா’வில் கமலுக்கு கிடைத்த அங்கீகாரம்

by Rohini |   ( Updated:2023-05-26 18:18:52  )
kamal
X

kamal

தமிழ் சினிமாவில் இன்று உலகமே போற்றும் வகையில் ஒரு உன்னத கலைஞனாக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். ஒரு உலக நாயகனாக வலம் வரும் கமல் சினிமா பற்றிய அறிவை நாள்தோறும் வளர்த்துக் கொண்டே வருகிறார். சிவாஜிக்கு அடுத்தப்படியாக ஒரு என்சைக்ளோபீடியோவாக இருக்கிறார் கமல்.

kamal1

kamal1

நடிப்புதான் எல்லாமே என்று இருந்து வரும் கமல் வெளி நாடுகளில் புதிது புதிதாக கொண்டுவரும் தொழில் நுட்பத்தை தமிழ் நாட்டில் சினிமாவில் அறிமுகப்படுத்துபவர் கமலாகத்தான் இருப்பார். இந்த நிலையில் கமலின் ஆரம்பகால நிலையை பற்றி ஏவிஎம் குமரன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

அதாவது கமல் குழந்தை நட்சத்திரமாகவும் முதன் முதலில் நடித்த படமாகவும் அமைந்தது களத்தூர் கண்ணம்மா திரைப்படம். இந்த திரைப்படத்தில் முதலில் கமல் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் டெய்சி ராணி என்ற குழந்தை தான் நடிக்க வேண்டியது. அதன் பிறகுதான் கமல் உள்ளே வந்தார். அதுமட்டுமில்லாமல் இந்தப் படத்தை முதலில் இயக்கியவர் டி.பிரகாஷ்ராவ் என்ற இயக்குனராம்.

kamal2

kamal2

ஆனால் அவர் காதல் கதைகளை அழகாக எடுக்கக் கூடியவராம். களத்தூர் கண்ணம்மாவில் முதலில் கமல் ஏதோ வந்துட்டு போற மாதிரிதான் காட்சிகள் எடுக்க திட்டமிட்டிருந்தார்களாம். ஆனால் அந்தப் படத்தில் கமலின் பெர்ஃபார்மன்ஸ் மற்றும் இன்னசண்ட் இவைகளை பார்த்த மெய்யப்பச்செட்டியார் இன்னும் கமலின் காட்சிகளை அதிகப்படுத்துங்கள் என ரைட்டரிடம் கூறினாராம்.

ஆனால் இதில் கொஞ்சம் கூட சம்மதமே இல்லையாம் இயக்குனர் பிரகாஷ் ராவுக்கு. நேராக மெய்யப்பச்செட்டியாரிடம் சென்று எனக்கு இந்த மாதிரி எடுக்க உடன்பாடு இல்லை என்றும் முதலில் காதல் கதையம்சம் கொண்ட படம் என்றுதான் சொன்னீர்கள், ஆனால் இப்போது அந்த குழந்தையை சுற்றி படத்தின் கதை அமையவேண்டும் என கூறுகிறீர்கள், அதனால் இந்தப் படத்தில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்றும் கூறி விலகினாராம். அதன் பிறகே பீம்சிங்கை அழைத்து படத்தை எடுக்க சொல்லியிருக்கிறார் மெய்யப்பச்செட்டியார்.

kamal3

kamal3

அதனாலேயே மெய்யப்பச்செட்டியார் டைட்டில் கார்டில் கமலின் பெர்ஃபாமன்ஸுக்காகவே தனியாக ஒரு சோலோ டைட்டில் கார்டு போட்டு கமலை அறிமுகப்படுத்துவதில் மிக்க மகிழ்ச்சி என்று குறிப்பிட்டிருந்தாராம். இந்த சுவாரஸ்ய சம்பவத்தை ஏவிஎம் குமரன் ஒரு பேட்டியில் கூறினார்.

Next Story