பாகுபலி நடிகரின் மார்க்கெட்டை காப்பாற்ற போகும் கமல்ஹாசன்?.. உச்ச நடிகருக்கு இப்படி ஒரு நிலைமையா?
தெலுங்கு சினிமா உலகில் முக்கிய நடிகராக திகழ்ந்து வந்த நடிகர் பிரபாஸ், “பாகுபலி” திரைப்படத்திற்கு பிறகு பேன் இந்திய நடிகராக உயர்ந்தார். எனினும் பாகுபலிக்குப் பிறகு அவர் நடித்த “சாஹோ”, “ராதே ஷ்யாம்” ஆகிய திரைப்படங்கள் சரியாக போகவில்லை.
இதனை தொடர்ந்து தற்போது “ஆதிபுரூஷ்” திரைப்படத்தில் பிரபாஸ் நடித்துள்ளார். இத்திரைப்படம் கடந்த பொங்கல் அன்று வெளியாக இருந்தது. ஆனால் இத்திரைப்படத்தின் டிரைலரை பார்த்து பலர் பொம்மை படம் போல் இருப்பதாக கேலி செய்யத்தொடங்கினார்கள். ஆதலால் இத்திரைப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை மெருகேற்ற படக்குழு முடிவு செய்ததால் ஜூன் மாதத்திற்கு வெளியீட்டை தள்ளி வைத்தனர்.
மேலும் பிரபாஸ், கேஜிஎஃப் இயக்குனரான பிரசாந்த் நீல் இயக்கத்தில் “சலார்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் “பிராஜெக்ட் கே” என்ற திரைப்படத்திலும் பிரபாஸ் நடிக்கவுள்ளார்.
இந்த “பிராஜெக்ட் கே” திரைப்படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க தீபிகா படுகோன், திசா படானி, அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து தற்போது இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. இத்திரைப்படத்திற்கு 500 கோடிகள் பட்ஜெட் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மூத்த பத்திரிக்கையாளர் அந்தணன், “பிரபாஸிற்கு மார்க்கெட் இருப்பதாக நினைக்கிறார்கள். அப்படி இல்லாமல் இவ்வளவு கோடிகளை இறக்கமாட்டார்கள். அதே போல் இந்த படத்தை பெரிய லெவலுக்கு கொண்டு சென்று முதலீடு செய்த பணத்தை திரும்ப எடுக்க வேண்டும் என்பதற்கு பெரிய நடிகர்களை உள்ளே கொண்டு வரவேண்டும். ஆதலால்தான் அமிதாப் பச்சன், கமல்ஹாசன் ஆகியோரை நடிக்க வைக்கிறார்கள்” என கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: அப்பா முன்னாடியே ஆடையில்லாமல்? சம்யுக்தாவை படு சித்ரவதை செய்த விஷ்ணு