கமல்ஹாசனுக்கு வணக்கம் வைக்காததால் அவதிக்குள்ளான ஜூனியர் ஆர்டிஸ்டு… இப்படியெல்லாம் நடந்திருக்கா?
கமல்ஹாசன் உலக நாயகனாக திகழ்ந்து வந்தாலும் அவர் மீது பல விமர்சனங்களையும் பலர் வைத்து வருவது உண்டு. அதாவது கமல்ஹாசன் மிகவும் கர்வமாகவே நடந்துகொள்வார் எனவும் யாருடனும் அவ்வளவு எளிதாக பழகமாட்டார் எனவும் அவருடன் பணியாற்றிய பலரும் கூறுவார்கள். அவ்வாறு ஒரு சம்பவத்தை குறித்துத்தான் இப்போது நாம் பார்க்கப்போகிறோம்.
கடந்த 2004 ஆம் ஆண்டு கமல்ஹாசன், சினேகா, பிரகாஷ் ராஜ், நாகேஷ் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “வசூல் ராஜா எம்பிபிஎஸ்”. இத்திரைப்படத்தை சரண் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த ஒரு சம்பவத்தை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட மீசை ராஜேந்திரன் பகிர்ந்துகொண்டுள்ளார்.
“வசூல் ராஜா” திரைப்படத்தில் ஒருவரை கமல் மிதிப்பது போன்ற ஒரு காட்சி இருந்திருக்கிறது. அந்த காட்சியில் மிதிவாங்குபவராக மூகாம்பிகை ரவி என்ற ஜூனியர் நடிகர் நடிப்பதாக இருந்தது. அந்த காட்சி படமாக்கபட இருந்த நாளில், அத்திரைப்படத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த அனைவரும் படப்பிடிப்புத் தளத்திற்கு வந்துவிட்டார்களாம். ஆனால் கமல்ஹாசன் மட்டும் கொஞ்சம் தாமதமாக வந்தாராம்.
கமல்ஹாசன் செட்டிற்குள் நுழைந்தவுடன் அங்கிருந்தவர்கள் பலரும் எழுந்து நின்று வணக்கம் வைத்தார்களாம். ஆனால் மூகாம்பிகை ரவி மட்டும் வணக்கம் வைக்கவில்லையாம். மூகாம்பிகை ரவி தனக்கு வணக்கம் வைக்காததை ஞாபகம் வைத்துக்கொண்டாராம் கமல்.
அதன் பின் அந்த காட்சியை படமாக்கித் தொடங்கியிருக்கிறார்கள். அப்போது அந்த காட்சியில் மூகாம்பிகை ரவியின் நடிப்பு திருப்தியளிக்கவில்லையாம். வழக்கமாக ஒரு நடிகரின் நடிப்பு திருப்தியளிக்கவில்லை என்றால் ஒன்மோர் கேட்பார்கள். ஆனால் கமல்ஹாசன், மூகாம்பிகை ரவியின் கதாப்பாத்திரத்தையே மாற்றிவிட்டாராம். அந்த கதாப்பாத்திரத்தில் மீசை ராஜேந்திரனை நடிக்க சொன்னாராம் கமல்ஹாசன். இவ்வாறு தனக்கு மரியாதை வைக்காத நடிகரை கமல்ஹாசன் என்ன செய்தார் பாருங்கள் என்று இந்த சம்பவத்தை அப்பேட்டியில் பகிர்ந்திருந்தார் மீசை ராஜேந்திரன்.