கமல் படம் பார்த்து போதையான ரஜினி… “3 பெக் அடிச்சும் ஏறல”… சூப்பர் ஸ்டாரின் நச்சுன்னு ஒரு கம்மெண்ட்…

Rajini and Kamal
கமல்ஹாசனும் ரஜினிகாந்த்தும் கிட்டதட்ட 16 திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இப்போதும் மிக நெருக்கமான நண்பர்களாக இருவரும் திகழ்ந்து வருகிறார்கள். சமீபத்தில் கூட “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இருவரும் இணைந்து கலந்துகொண்டனர்.

Rajini and Kamal
ரஜினிகாந்த் படம் வெளிவந்தால் கமல்ஹாசன் அத்திரைப்படத்தை பார்த்துவிட்டு பாராட்ட தவறமாட்டார். அதே போல் கமல்ஹாசன் திரைப்படம் வெளிவந்தால் ரஜினிகாந்த் அத்திரைப்படத்தை பார்த்துவிட்டு பாராட்ட தவறமாட்டார். இவ்வாறு இருவருக்குள்ளும் இருக்கும் புரிதல் பலரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கும்.
இந்த நிலையில் கமல்ஹாசன் நடித்த “நாயகன்” திரைப்படத்தை பார்த்துவிட்டு ரஜினிகாந்த் வித்தியாசமாக பாராட்டியது குறித்து இயக்குனர் பி.வாசு சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆரும் சின்னப்பா தேவரும் போட்டுக்கொண்டு ஒப்பந்தம்… நட்புன்னா இப்படில இருக்கனும்!!

Nayakan
கமல் நடித்த “நாயகன்” திரைப்படத்தை பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்த ரஜினி, தொடர்ந்து மது அருந்திகொண்டே இருந்தாராம். ஆனால் சுத்தமாக போதையே ஏறவில்லையாம். அந்த அளவுக்கு “நாயகன்” கொடுத்த தாக்கம் அவரை போட்டு வாட்டியதாம்.
இன்னும் கொஞ்சம் மது அருத்திபார்க்கலாம் என்று நினைத்து அருந்தினாராம். அப்படியும் போதை ஏறவில்லையாம். உடனே கமல்ஹாசனுக்கு தொலைப்பேசியில் அழைத்தாராம் ரஜினிகாந்த். “கமல், 3 பெக்கை விட வேலு நாயக்கரின் போதை அதிகமா இருக்கு” என அப்படத்தை பாராட்டும் வகையில் கூறினாராம். இவ்வாறு மிகவும் வித்தியாசமான முறையில் ரஜினிகாந்த் நாயகன் திரைப்படத்தை பாராட்டினாராம்.

Nayakan and Manithan
கமல்ஹாசனின் “நாயகன்” திரைப்படம் 1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி வெளியானது. இதே நாளில்தான் ரஜினிகாந்த் நடித்த “மனிதன்” திரைப்படமும் வெளியானது. இந்த இரண்டு திரைப்படங்களுமே மாபெரும் வெற்றிப்பெற்றது குறிப்பிடத்தக்கது.