கமல்ஹாசனின் உண்மையான பெயர் இதுதானா?...பொது மேடையில் போட்டு உடைத்த விக்ரம்..

by Arun Prasad |   ( Updated:2022-09-19 14:14:29  )
கமல்ஹாசனின் உண்மையான பெயர் இதுதானா?...பொது மேடையில் போட்டு உடைத்த விக்ரம்..
X

உலக நாயகன் என போற்றப்படும் கமல்ஹாசன் சிறு வயதில் இருந்தே திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழ் மட்டும் அல்லாது இந்திய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான “விக்ரம்” திரைப்படம் மாஸ் ஹிட் ஆனது. யாரும் எதிர்பார்த்திரா விதமாக அத்திரைப்படம் அசாதாரண வசூலை கைப்பற்றியது. உலக அளவில் பாக்ஸ் ஆஃபீஸை திணறடித்தது.

சுமார் ரூ. 400 கோடிகளுக்கும் மேல் வசூல் ஆனது. கமல்ஹாசனின் திரைப்படப் பயணத்திலேயே மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாக “விக்ரம்” திரைப்படம் அமைந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனத்தின் 15 ஆம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. அதில் ஆமீர் கான், போனி கபூர், கமல்ஹாசன், சீயான் விக்ரம், விஷ்ணு விஷால் என பலரும் கலந்துகொண்டனர்.

அப்போது மேடையில் பேசிய சீயான் விக்ரம் தனது தாத்தா கமல்ஹாசன் குறித்து கூறிய ஒரு விஷயத்தை பகிர்ந்துகொண்டார்.

“எனது தாத்தாவின் பெயர் ஜோதி நாயகம். அவர் பரமக்குடியில் ஒரு பிரபல பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றினார். அப்போது அந்த பள்ளியில் சாரு, சந்துரு, நளினி ஆகியோர் படிக்க வந்திருக்கின்றார்கள். அந்த மூவருக்கும் ஒரு தம்பி இருந்திருக்கிறார். அவரது பெயர் பார்த்தசாரதி. அவர் பள்ளியில் படிக்க முடியவில்லை. ஆனால் விளையாட வருவார். அதன் பிறகு சில காலம் கழித்து அவர்கள் சென்னை வந்துவிட்டனர். அந்த பார்த்தசாரதி தான் கமல்ஹாசன்” என விக்ரமிடம் அவரது தாத்தா கூறியிருக்கிறார்.

இதனை விக்ரம் அம்மேடையில் பகிர்ந்துகொண்ட போது அனைவருக்கும் வியப்பு ஏற்பட்டது. கமல்ஹாசன் என்ற பெயர் மட்டும் தான் நமக்கு தெரியுமே தவிர அவருடைய உண்மையான பெயர் பார்த்தசாரதி என்பது பொதுவெளியில் பெரும்பாலும் அறியாத விஷயமாகவே இருந்தது. தற்போது இதனை விக்ரம் வெளிபடுத்திவிட்டார். இச்செய்தி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Next Story