20 வருடங்களுக்கு முன்பே “ஒத்த செருப்பு” கதையை சொன்ன கமல்… அதிர்ந்து போன பார்த்திபன்… உலகநாயகன்னா சும்மாவா!!

Published on: October 8, 2022
---Advertisement---

தமிழ் சினிமா உலகில் கமல்ஹாசன் செய்த சாதனைகள் எவ்வளவோ உண்டு. வித்தியாசமான கதைக்களம், பன்மைத்துவ நடிப்பு, நவீன தொழில்நுட்பங்கள் என அவர் தொடங்கிவைக்காத விஷயமே இல்லை.

ஒரு கதாப்பாத்திரத்திற்கு அவர் செய்யும் மெனக்கெடல்கள், சினிமா மீதான அவரது வெறி, ஒரு திரைப்படத்திற்காக அவர் செய்யும் நுணுக்கள் எல்லாம்தான் அவரை உலக நாயகனாக உயர்த்தியிருக்கிறது.

சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலேயே முதலீடு செய்பவர் கமல்ஹாசன். ஆதலால் பல நஷ்டங்களையும் அவர் சந்திப்பதுண்டு. ஆனால் மனம் தளராமல் புது புது முயற்சிகளை செய்துபார்ப்பார். அந்தளவிற்கு சினிமாவின் மேல் உயிரையே வைத்திருப்பவர் என்று கூட சொல்லலாம். இந்த நிலையில் பார்த்திபன் இயக்கிய “ஒத்த செருப்பு” திரைப்படம் போலவே 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கதையை திட்டமிட்டிருந்திருக்கிறார் கமல்.

ஒரே ஒரு கதாப்பாத்திரத்தை மட்டும் மையமாக வைத்து எழுதப்பட்ட கதைதான் “ஒத்த செருப்பு”. இத்திரைப்படத்தில் பார்த்திபன் மட்டுமே நடித்திருப்பார். இந்திய சினிமாவின் முதல் முயற்சியாக இதனை சிறப்பாக இயக்கி சாதனை படைத்திருந்தார் பார்த்திபன்.

இந்த நிலையில் 20 வருடங்களுக்கு முன்பே இது போன்ற ஒரு கதையை கமல்ஹாசன் சிந்தித்திருக்கிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் ஆனந்தா எல் சுரேஷ் “ஒரு முறை மேட்டுப்பாளையத்தில் இருந்து கமலுடன் ரயிலில் பயணத்துக்கொண்டிருந்தபோது பரிசோதனை முயற்சியாக ஒரு சினிமாவை ஏன் நீங்கள் தயாரிக்கக்கூடாது என கேட்டார். நீங்கள் அப்படி ஒரு கதை இருந்தால் கூறுங்கள் என கேட்டேன். அதற்கு கமல் ‘நான் ஒருவன் தான் ஹீரோ. வேறு யாரும் படத்தில் கிடையாது. கதை முழுவதும் என்னை சுற்றியே நடக்கிறது’ என ஒரு ஐடியாவை கூறினார்.

அதற்கு நான் எப்படி இப்படி ஒரு கதையை எடுக்கமுடியும் என கேட்டேன். அதன் பின் கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் ஒரு கதையை என்னிடம் கூறினார். நான் நன்றாக இருக்கிறது என கூறினேன். ஆனால் அதன் பின் அவரும் அந்த கதையை மறந்துவிட்டார், நானும் மறந்துவிட்டேன்” என கூறினார்.

அதன்பின் மேலும் பேசிய அவர் “பார்த்திபன் என்னிடம் வந்து ‘ஒத்த செருப்பு என்று ஒரு திரைப்படத்தை இயக்கப்போகிறேன்’ என கூறினார். அவரிடம் நான் இது போன்ற ஒரு கதையை இருபது வருடங்களுக்கு முன்பே கமல் என்னிடம் கூறினார் என சொன்னேன். அவர் அன்று சொன்னதை நீங்கள் நிறைவேற்றிவிட்டீர்கள் எனவும் பார்த்திபனிடம் கூறினேன்” எனவும் பகிர்ந்துகொண்டார். இது போன்ற ஒரு பரிசோதனை முயற்சியை அன்றே கணித்துள்ளார் கமல் என்ற செய்தி வியப்பை ஏற்படுத்துகிறது. உலகநாயகன் என்றால் சும்மாவா!

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.