நடிகர் கமல்ஹாசன் எவ்வித அடைமொழியும், பட்டங்களும் இல்லாமல் என்னை அழைக்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் : தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவின் ஒரு அடையாளம் நடிகர் கமல்ஹாசன். களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக கேமரா முன் நின்று நடிக்க தொடங்கிய இவரின் திரைவாழ்க்கை இன்றும் நீடித்துக் கொண்டிருக்கின்றது. 70 வயது தாண்டிய நிலையிலும் சினிமாவில் நிலைத்து நிற்கின்றார்.
ஒவ்வொரு படத்திலும் பல புதுமைகளை புகுத்துபவர். பலரும் இவரை ரோல் மாடலாக பார்த்து வருகிறார்கள். சிறு வயது முதலே கேமரா முன் நிற்கும் அவர் அனைத்து ஜானரிலும் புகுந்து விளையாட கூடியவர். சினிமாவில் இருக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் தனது விரல் நுனியில் வைத்திருப்பவர். கமல்ஹாசன் என்கின்ற பெயரை இந்திய சினிமாவில் இருந்து எப்போதும் அழிக்க முடியாது.
இதையும் படிங்க: Kanguva: அப்போ அந்த வில்லன் இவருதானா…? சூர்யாவுக்காக தன் கொள்கையையே மாத்திட்டாரே!… வேற லெவல்…
ஏஐ டெக்னாலஜி: கல்வி கற்பதற்கு வயது முக்கியமில்லை என்று நினைக்கக்கூடிய கமல்ஹாசன் தொடர்ந்து புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்ளும் ஆர்வம் உடையவர். தற்போது படங்களில் அதிக அளவில் பயன்படுத்துபட்டு வரும் ஏஐ டெக்னாலஜியை கற்றுக் கொள்வதற்காக அமெரிக்கா சென்று இருக்கின்றார்.
தக் லைஃப்: சினிமாவில் இருந்து விலகி அரசியல் கட்சியை தொடங்கிய கமல்ஹாசன் அவர்களை மீண்டும் சினிமாவிற்குள்ளே இழுத்து வந்துவிட்டது விக்ரம் திரைப்படம். இந்த திரைப்படத்தின் வெற்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்கே மிகவும் புத்துணர்ச்சியாக இருந்தது. அதைத் தொடர்ந்து தற்போது மணிரத்தினம் அவர்களின் இயக்கத்தில் தக் லைப் என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இவர்கள் இருவரின் கூட்டணியில் உருவாகும் தக் லைப் திரைப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கின்றது.
உலகநாயகன்: தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் என்பதை தாண்டி உலக நாயகன் மற்றும் ஆண்டவர் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வந்தார். உலகநாயகன் என்கின்ற சொல்லுக்கு எப்போதும் தகுதியானவர் நடிகர் கமல்ஹாசன். இந்த பட்டம் ரசிகர்களாலும் சக கலைஞர்களாலும் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சமீப காலமாக பலரும் அவரை செல்லமாக ஆண்டவர் என்று அழைத்து வருகிறார்கள்.
பட்டம் வேண்டாம்: நடிகர் கமலஹாசன் தற்போது தனது உலகநாயகன் பட்டத்தை துறப்பதாக சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்திருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது: ‘சினிமா கலை எந்த ஒரு தனி மனிதனையும் விட பெரியது. அந்த கலையில் நான் மேன்மேலும் கற்றுக்கொண்டு பரிமாணம் அடைய விரும்பும் மாணவன். கற்றது கைமண் என்பதை உணர்ந்தவனாகவும், தொடர்ச்சியான முன்னகர்வில் நம்பிக்கை கொண்டு உழைத்து உயர்வானாகவும் இருப்பதே எனக்கு உவப்பானது.
இதையும் படிங்க: Delhi ganesh: மகனுக்கு டெல்லிகணேஷ் கொடுத்த டாஸ்க்… எல்லாம் சொல்லிக் கொடுத்தவர் அதை மட்டும் விட்டுட்டாரே..!
அதனால் நிறைய யோசனைக்கு பிறகு ஒரு முடிவுக்கு வந்துள்ளேன். தனக்கு வழங்கப்பட்ட உலகநாயகன் போன்ற பட்டங்களையும் அடைமொழிகளையும் வழங்கியவர்களுக்கு எந்த மரியாதை குறைவும் வந்துவிடக்கூடாது என்பதற்காக அவற்றை துறப்பது என்று முடிவு செய்து இருக்கின்றேன். இனிமேல் என்னை கமல்ஹாசன் என்றோ கமல் என்றோ KH என்று குறிப்பிட்டால் போதுமானது’ என கேட்டுக்கொள்கின்றேன் என்று தெரிவித்து இருக்கின்றார்.
Vijay serials:…
கங்குவா படம்…
கங்குவா படம்…
தமிழ் சினிமாவில்…
கங்குவா திரைப்படம்…