“பிளடி நான்சென்ஸ்”… வசந்தபாலனை வாய்க்கு வந்தபடி திட்டிய கமல்ஹாசன்… ஓட்டம் பிடித்த இயக்குனர் ஷங்கர்…

Kamal and Vasanthabalan
1996 ஆம் ஆண்டு கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, நெடுமுடி வேணு ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “இந்தியன்”. இத்திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கியிருந்தார். தந்தை-மகன் என இரண்டு கதாப்பாத்திரங்களில் கமல்ஹாசன் இத்திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Indian
குறிப்பாக சேனாதிபதி என்ற வயதான கெட்டப்பில் கமல் மிகவும் ஆச்சரியத்தக்க நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். “பிராஸ்தெதிக் மேக்கப்” என்ற புதிய மேக் அப் முறையை கமல்ஹாசனின் வயதான கெட்டபிற்கு பயன்படுத்தியிருந்தார்கள். இந்தியாவில் பிராஸ்தெதிக் மேக்கப் முறையை பயன்படுத்திய முதல் திரைப்படம் “இந்தியன்” என்பது குறிப்பிடத்தக்கது.
“இந்தியன்” திரைப்படம் தமிழ் சினிமாவின் முக்கிய வெற்றித்திரைப்படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து தற்போது “இந்தியன் 2” திரைப்படத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார்.

Indian
இந்த நிலையில் இயக்குனர் வசந்தபாலன், “இந்தியன்” திரைப்படத்தில் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியபோது, கமல்ஹாசன் கோபத்தின் உச்சிக்கே சென்ற ஒரு சம்பவத்தை குறித்து ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

Vasanthabalan
“இந்தியன்” திரைப்படத்தில் ஒரு காட்சியில் சேனாதிபதியாக வரும் கமல்ஹாசனை, சிபிஐ அதிகாரியான நெடுமுடி வேணு தனது வீட்டில் கைவிலங்கால் பிணைத்து அடைத்து வைத்துவிடுவார். அப்போது கமல்ஹாசன் அந்த வீட்டின் சமையலறைக்குள் மெல்ல ஊர்ந்து ஊர்ந்து வந்து சிலிண்டரை எரியவிட்டு அந்த தீயில் கைவிலங்கை வைத்து அறுப்பார்.
இந்த காட்சியை படமாக்குவதற்கு முன்பு இயக்குனர் ஷங்கர் தனது உதவியாளரான வசந்தபாலனை வைத்து கேமரா கோணத்திற்காக ஒத்திகை பார்த்திருக்கிறார். அதில் வசந்தபாலன் ஒரே மூச்சில் தாவி சிலிண்டர் இருக்கும் சமையல் அறைக்குள் உருண்டு வந்திருக்கிறார். இந்த காட்சியை பார்த்த ஷங்கர் “இது நன்றாக இருக்கிறது. இப்படியே எடுத்துவிடுவோம்” என கூறியிருக்கிறார்.

Indian
சில மணி நேரங்களில் கமல்ஹாசன் தனது சேனாதிபதி கதாப்பாத்திரத்திற்கான மேக்கப்பை போட்டுவிட்டு படப்பிடிப்புத் தளத்திற்குள் வந்தார். ஷங்கர் குறிப்பிட்ட காட்சியை விவரிக்க கமல்ஹாசன் நடிக்கத்தொடங்கிவிட்டார்.
கமல்ஹாசன் கைவிலங்குடன் மெதுவாக ஊர்ந்து ஊர்ந்து சமையலறைக்கு வந்தாராம். அதனை பார்த்த ஷங்கர் கட் சொல்லிவிட்டு, வசந்தபாலனை அந்த காட்சியில் நடித்துக்காட்டச் சொல்லியிருக்கிறார்.
உடனே வசந்தபாலன், ஒரே மூச்சில் சமையலறைக்குள் வேகமாக உருண்டு வருவது போல் நடித்திருக்கிறார். அதனை பார்த்தவுடன் கமல்ஹாசனுக்கு கோபம் தலைக்கேறிவிட்டதாம்.

Indian
வசந்தபாலனை பார்த்து “வாட் நான்சென்ஸ். வயதான கதாப்பாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன். நீ செய்வது போல் எப்படி ஒரு வயதான ஆள் செய்வார்” என கோபத்தில் கத்தினாராம்.
கமல்ஹாசன் கோபத்தில் கத்தியவுடன் படப்பிடிப்பில் இருந்த ஷங்கர், உதவியாளர்கள், கேமரா மேன் என அனைவரும் தலை தெறிக்க ஓடிவிட்டனராம். அதன் பிறகுதான் கமல்ஹாசன் கூறியது போல் எடுக்கத்தொடங்கினார்களாம்.

Shankar
இச்சம்பவத்தை மிகவும் நகைச்சுவையாக குறிப்பிட்டு பேசிய வசந்தபாலன் “இந்தியன் படப்பிடிப்பு முடியும் வரை கமல்ஹாசன் என்னை முறைத்துக்கொண்டுதான் இருந்தார்” எனவும் கூறியது குறிப்பிடத்தக்கது.