மீண்டும் மணிரத்னத்துடன் கை கோர்க்கும் கமல்!.. செம டிவிஸ்ட்டா இருக்கே!..

by சிவா |   ( Updated:2024-08-21 12:52:52  )
thug life
X

Kamal manirathnam: தமிழ் சினிமா மட்டுமில்லை. இந்திய அளவில் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக எல்லோராலும் மதிக்கப்படுபவர்தான் மணிரத்னம். மௌன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், அஞ்சலி, ரோஜா, தளபதி, பம்பாய், அலை பாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால் என தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க படங்களை இயக்கியவர்.

தமிழ் சினிமாவில் மிகவும் நேர்த்தியாகவும், இளமை ததும்பும் காதல் திரைப்படங்களை இன்னமும் இயக்கி வருகிறார். இவரைப்போல காதல் காட்சிகளை திரைப்படங்களில் அமைக்கும் இயக்குனர் யாருமே இல்லை என்றே சொல்ல வேண்டும். அதனால்தான், அவருக்கு பின் வந்த கவுதம் மேனன், ரஞ்சித், லிங்குசாமி, லோகேஷ் போன்ற இயக்குனர்களே மணிரத்னத்தின் ரசிகர்களாக இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: ஹே.. அண்ணன் வரார் வழிவிடு… தவெக கழக தலைவர் வெளியிட்டதை கவனிச்சீங்களா?

எம்.ஜி.ஆர், கமல் என பலர் முயன்றும் எடுக்கமுடியாமல் போன பொன்னியின் செல்வனை எடுத்து வெற்றி பெற்று காட்டியவர் மணிரத்னம். அதுவும் பொன்னியின் செல்வன் நாவலை குறுகிய காலகட்டத்தில் 2 பாகங்களாக எடுத்து காட்டியவர். மணிரத்னம் மிகவும் வேகமாக வேலை செய்யும் பழக்கம் கொண்டவர்.

இப்போது கமல், சிம்பு உள்ளிட்ட பலரையும் வைத்து தக் லைப் என்கிற படத்தை இயக்கி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், உதயநிதியின் ரெட் ஜெயண்ட் என 3 நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது.

இதையும் படிங்க: என்னங்க? சிவகார்த்திகேயன் இப்படி வரிசையா அடி வாங்குறீங்க… அடுத்த பஞ்சாயத்தா இது?

இந்த படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் ஆகியோர் நடிப்பதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அது நடக்காமல் போக சிம்பு உள்ளே வந்தார். மணிரத்னம், கமல் என இருவரும் இருப்பதால் சிம்பு இப்படத்தில் வாலை சுருட்டிக்கொண்டு பல நாட்கள் கால்ஷீட் கொடுத்து சரியாக படப்பிடிப்புக்கும் வந்து நடித்து கொடுத்திருக்கிறார்.

இந்நிலையில், மணிரத்னத்தின் திட்டமிடலையும், படம் எடுக்கும் வேகத்தையும் பார்த்த கமல் மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க முடிவெடுத்திருக்கிறாராம். தக் லைப் படத்திற்கு பின் கல்கி 2, அன்பு அறிவு இயக்கத்தில் ஒரு படம், லோகேஷின் விக்ரம் ரிட்டன்ஸ் ஆகிய படங்களில் நடித்துவிட்டு கமல் மீண்டும் மணிரத்னத்துடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story