“எனக்கு விருது கொடுப்பதை முதலில் நிறுத்துங்கள்”… பொங்கி எழுந்த கமல்… காரணம் என்ன தெரியுமா?

Kamal Haasan
உலக நாயகன் என்று போற்றப்படும் கமல்ஹாசன், இன்றோடு தனது 68 ஆவது வயதை பூர்த்தி செய்கிறார். இந்திய சினிமாவில் கமல்ஹாசன் முறியடிக்காத சாதனைகளும் கிடையாது, கடக்காத எல்லைகளும் கிடையாது.

Kamal Haasan
4 தேசிய விருதுகள், 19 பிலிம் ஃபேர் விருதுகள், பத்ம ஸ்ரீ, பத்ம பூசன், செவாலியர் என இன்னும் பல விருதுகளுக்கு சொந்தக்காரராக திகழ்ந்து வருபவர் கமல்ஹாசன். சினிமாவுக்காக தன் உயிரையே பணயம் வைக்கும் அளவுக்கு, தனது ரத்தத்தில் சினிமா வெறி ஊறிப்போனவர்.
“களத்தூர் கண்ணம்மா” திரைப்படத்தில் தொடங்கி “விக்ரம்” திரைப்படம் வரை, தனது சினிமா பயணத்தில் பல தடைகளையும், தோல்விகளையும், சரிவுகளையும் தாண்டி இன்றும் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக்கொண்டிருக்கிறார். இவ்வாறு பல பெருமைகளுக்கு சொந்தக்காரரான கமல்ஹாசன், ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக மாற்றிய முதல் இந்திய நடிகராக திகழ்கிறார்.
இதையும் படிங்க: இளையராஜாவுடன் ஏற்பட்ட மோதல்??… இசையமைப்பாளராக அவதாரம் எடுத்த பாக்யராஜ்… ஓஹோ இதுதான் காரணமா??

Kamal Haasan
குழந்தை நட்சத்திரமாகவும் துணை நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்த கமல்ஹாசன், தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகிய திரைப்படம் “மாலை சூடவா” என்றாலும் “கன்னியாகுமரி” என்ற மலையாளத் திரைப்படத்தில்தான் கமல்ஹாசன் முதன்முதலில் கதாநாயகனாக அறிமுகமானார்.

Kamal Haasan
இந்திய சினிமாவில் 18 முறைக்கு மேல் ஃபிலிம் ஃபேர் விருதுகள் வாங்கிய பெருமை கமல்ஹாசனையே சேரும். இறுதியாக “ஹே ராம்” திரைப்படத்திற்காக 19 ஆவது முறையாக ஃபிலிம் ஃபேர் விருது வாங்கிய கமல்ஹாசன், இனிமேல் எனக்கு விருது தராதீர்கள் என கூறினாராம். ஏன் தெரியுமா? “இனி எனக்கு விருது தராதீர்கள். புதிய திறமையான இளைஞர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு விருது தாருங்கள்” என ஃபிலிம் ஃபேருக்கு கடிதம் எழுதினாராம். இதன் மூலம் கமல்ஹாசனின் பெருந்தன்மையும் புதிய நடிகர்களின் திறமையை மதிக்கக்கூடிய அவரின் குணமும் வெளிப்படுகிறது.