Cinema History
என்னையே எதிர்த்து பேசுறியா?.. இயக்குனரால் கடுப்பாகி படப்பிடிப்பை நிறுத்திய நாகேஷ்!..
தமிழ் சினிமாவில் தனிப்பட்ட நடிப்பு திறன் கொண்ட நகைச்சுவை கலைஞர்களில் முக்கியமானவர் நடிகர் நாகேஷ். நாகேஷின் நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாகவே அவரை சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் கதாநாயகன் ஆக்கினார் பாலச்சந்தர்.
அதன் பிறகு பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நாகேஷ் நடித்தார். அதன் பிறகு கலர் சினிமா காலக்கட்டம் வந்த பிறகு நாகேஷ் துணை கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார். இந்த காலக்கட்டத்தில் நடிகர் கமல் தொடர்ந்து அவரது திரைப்படங்களில் நாகேஷிற்கு வாய்ப்புகள் வழங்கி வந்தார்.
இந்த சமயத்தில்தான் அபூர்வ சகோதரர்கள் திரைப்படமும் தயாரானது. இந்த படத்தை இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கினார். அவருக்கு துணை இயக்குனராக ராசி அழகப்பன் பணிப்புரிந்தார். அதில் டெல்லி கணேஷ், நாகேஷ் போன்ற காமெடி நடிகர்களை வில்லனாக்கலாம் என திட்டமிட்டார் இயக்குனர்.
எனவே இதற்காக நாகேஷிடம் பேசப்பட்டது. பிறகு படத்தின் முக்கிய காட்சியாக சேதுபதி என்கிற கமல் கதாபாத்திரம் வில்லன்களை கைது செய்யும் காட்சிகள் படமாக்கப்பட்டது. அந்த காட்சியில் எந்த வசனமும் இருக்க கூடாது என முடிவெடுத்திருந்தார் இயக்குனர். ஆனால் நாகேஷ் திடீரென ஒரு டயலாக் பேசினார்.
உடனே இயக்குனர் சார் அந்த டயலாக் நீங்க பேச வேண்டாம். இந்த காட்சிக்கு எந்த டயலாக்கும் தேவை இல்லை என உதவி இயக்குனர் ராசி அழகப்பன் கூறவும் நாகேஷ் கடுப்பாகிவிட்டார். என்னையே எதிர்த்து பேசுறியா என படப்பிடிப்பையே நிறுத்திவிட்டார் நாகேஷ்.
அதன் பிறகு அங்கு வந்த கமல்ஹாசன் விஷயத்தை என்னவென்று கேள்விப்பட்டு நாகேஷிடம் சென்று இயக்குனர் சொல்வது போல நடித்து கொடுங்கள் என கூறியுள்ளார். நாகேஷும் கோபமாகவே அந்த காட்சியை நடித்து கொடுத்துள்ளார்.
ஆனால் படம் நல்ல ஹிட் கொடுத்த பிறகு நாகேஷே வந்து ராசி அழகப்பனை பாராட்டியுள்ளார். இதை ராசி அழகப்பனே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.