கையை கட்டிக்கொண்டு அடங்கி போய் நிற்கும் கமல்.! அவர் முன்னாடி நின்னு தானே ஆகனும்.!
இன்றைய தமிழ் சினிமாவில் மிக பெரிய பைனான்சியர் என்றால் அது அன்பு செழியன் தான். அவர் கொடுக்கும் கடன் தயவில் படம் எடுத்து பெரிய லாபத்தை ஈட்டிய தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவில் கணிசமாக இருக்கின்றனர்.
இவரது மகளுக்கு இன்று கோலாகலமாக திருமணம் நடைபெறுகிறது. இதில் ஒட்டுமொத்த கோலிவுட் நட்சத்திரங்களும் இங்கு தான் இருக்கிறார்கள் போல. அப்படி நட்சத்திர கூட்டம் நிரம்பி இருக்கிறது.
இதையும் படியுங்களேன் - இப்படித்தான் இது OTT படங்களின் மிக பெரிய வெற்றியை உறுதி செய்கிறார்களா.?!
இதில் உலகநாயகன் கமல்ஹாசன், ரஜினிகாந்த், பிரபு என மூத்த நட்சத்திரங்கள் நேரில் வந்துள்ளனர். அதில் கமல் புகைப்படம் மட்டும் காலையில் வெளியாகியுள்ளது. அதில் கமல் , பிரபு ஆகியோர் மேடையின் ஓரமாக கை கட்டிக்கொண்டு அமைதியாக நின்று கொண்டு இருக்கின்றனர்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.