கமல் நடித்து அட்டர்பிளாப்பான படங்கள்... லிஸ்ட்ல அந்தப் படமும் இருக்கா?

by sankaran v |   ( Updated:2025-03-26 06:05:55  )
kamal
X

kamal

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அப்பவே தரமான நடிப்பைக் கொண்டு திரையுலகில் நுழைந்தவர் கமல். அப்புறம் தனது திறமையால் மேல வந்தார். தரமான நடிப்பு, பைட், டான்ஸ், பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பலதுறை வித்தகர். பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்தவர். இனி கமல் நடிப்பில் அட்டர்பிளாப்பான படங்களைப் பார்க்கலாமா...

மரியா மை டார்லிங்

1980ல் துரை இயக்கத்தில் கமல், ஸ்ரீபிரியா நடிப்பில் வெளியானது. சங்கர் கணேஷ் இசை அமைத்துள்ளார். தமிழ், கன்னட மொழிகளில் வெளியானது. சுமாரான கதை. பிளாப் ஆனது.

பகடை பன்னிரெண்டு

1982ல் என்.தாமோதரன் இயக்கத்தில் வெளியான படம் பகடை பன்னிரெண்டு. கமல், ஸ்ரீபிரியா, ஒய்.ஜி.மகேந்திரன், காஞ்சனா உள்பட பலர் நடித்துள்ளனர். மோசமான கதைகளம். படம் பிளாப்.

அந்த ஒரு நிமிடம்

1985ல் மேஜர் சுந்தரராஜன் இயக்கி, பழ.கருப்பையா, சம்பத் தயாரிப்பில் வெளியான படம் அந்த ஒரு நிமிடம். கமல், ஊர்வசி, ஜெயமாலினி, தேங்காய் சீனிவாசன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார். மோசமான கதைகளம். படம் பிளாப்.

மங்கம்மா சபதம்

1985ல் கே.விஜயன் இயக்கத்தில் வெளியான படம் மங்கம்மா சபதம். கமல், மாதவி, சத்யராஜ், சுஜாதா உள்பட பலர் நடித்துள்ளனர். சங்கர் கணேஷ் இசை அமைத்துள்ளார். படம் பராவாயில்லாமல் இருந்தாலும் பிளாப் ஆனது.

கலைஞன்

kalaignan

kalaignan

ஜி.பி.விஜய் இயக்கத்தில் 1993ல் வெளியான படம் கலைஞன். கமல், சிவரஞ்சனி, பிந்தியா, நாசர் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார். சுமாரான கதை. பாக்ஸ் ஆபீஸ்ல நோ வசூல். படம் பிளாப்.

ராணித்தேனீ

1982ல் ஜிஎன்.ரங்கராஜன் தயாரித்து இயக்கிய படம் ராணித்தேனீ. கமல், மகாலட்சுமி உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார். சுமாரான கதை. அட்டர்பிளாப்.

மன்மதன் அம்பு

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரெட்ஜெயண்ட் மூவீஸ் தயாரிக்க 2010ல் வெளியான படம் மன்மதன் அம்பு. கமல், திரிஷா, மாதவன், ஓவியா உள்பட பலர் நடித்துள்ளனர். தேவிஸ்ரீபிரசாத் இசை அமைத்துள்ளார். படத்தோட கதை சுமார். படம் பிளாப்.

உத்தம வில்லன்

2015ல் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் வெளியான படம் உத்தம வில்லன். கமல், பாலசந்தர், ஊர்வசி, ஜெயராம், ஆண்ட்ரியா, நாசர் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். சுமாரான கதைகளம். பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் ஆவரேஜ். ஆனாலும் பிளாப் லிஸ்ட்.

விஸ்வரூபம் 2

vishwaroop2 india 2

vishwaroop2 india 2

2018ல் கமல் தயாரித்து இயக்கி நடித்த படம். கமல், ஆண்ட்ரியா உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் மியூசிக். விஸ்வரூபம் மாதிரி இந்தப் படம் அமையல. அட்டர் பிளாப்.

இந்தியன் 2

லைகா புரொடக்ஷன், ரெட்ஜெயண்ட் இணைந்து தயாரித்து 2024ல் வெளியான படம் இந்தியன் 2. ஷங்கர் இயக்கியுள்ளார். கமல், சித்தார்த், ரகுல் பிரீத்திசிங், பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் இந்தியன் மாதிரி சரியாகப் போகல. அட்டர்பிளாப்.

இந்த லிஸ்ட்ல மகாராசன், மும்பை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

Next Story