இந்தியன் 2 ரிலீஸ் தேதி இதுதானாம்!... அட ஒரு வழியா முடிவுக்கு வந்துட்டாங்க!..
ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, ஊர்மிளா, கவுண்டமணி, நெடுமுடி வேணு உட்பட பலரும் நடித்து 1996ம் வருடம் வெளியான திரைப்படம் இந்தியன். சுதந்திர போராட்ட தியாகி ஒருவர் லஞ்சத்திற்கு எதிராக போராடும் கதை. ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று இப்படம் ஹிட் அடித்தது.
பல வருடங்களுக்கு பின் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை துவங்கினார் ஷங்கர். லைக்கா புரடெக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்தது. ஆனால், பல காரணங்களால் இப்பபடத்தின் படப்பிடிப்பு தள்ளி தள்ளி போனது. கமலுக்கும், லைக்காவும் உரசல், ஷங்கருக்கும் லைக்காவும் இடையே உரசல் என பல பிரச்சனைகள் எழுந்தது.
இதையும் படிங்க:14 முறை கமலுடன் மோதிய அஜித் படங்கள்!.. ஜெயித்தது யாரு?.. உலக நாயகனா? அல்டிமேட் ஸ்டாரா?..
கடந்த 4 வருடங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. கமல் மீண்டும் இந்தியன் தாத்தாவாக நடிக்க சித்தார்த், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் நடிக்க துவங்கினார். படப்பிடிப்பு 2 வருடங்கள் நடந்தது. நிறைய காட்சிகள் எடுக்கப்பட்டதால் இந்தியன் 3 படத்திற்கான காட்சிகளே ரெடியாகிவிட்டதாக சொல்லப்பட்டது.
அதன்பின் இந்தியன் 2 படத்திற்கான எடுக்கப்பட்டு வந்தது. ஒருபக்கம் ஷங்கர் தெலுங்கில் ராம்சரணை வைத்து கேம் சேஞ்சர் படத்தையும் இயக்கி வந்தார். இடையில் கமல்ஹாசன் விக்ரம் படத்தில் நடித்து முடித்தார். அதோடு, மணிரத்தினத்தின் இயக்கத்தில் தக் லைப் படத்திலும் நடிக்க துவங்கிவிட்டார்.
இதையும் படிங்க: விஜயிற்கு கதை சொல்ல போய் பல்ப் வாங்கி வந்த முன்னணி நடிகர்… என்னங்க இப்படி ஆகிப்போச்சு!
ஆனாலும், இந்தியன் 2 படம் இப்போதுவரை முடிந்தபாடில்லை. எனவே, இந்த படம் எப்பதான்டா வரும் என ரசிகர்களே சோர்ந்து போனார்கள். இந்நிலையில், இந்தியன் 2 படம் வருகிற ஜூன் மாதம் ரிலீஸ் ஆகும் என லைக்கா இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. என்ன தேதி என அவர்கள் சொல்லவில்லை என்றாலும் ஜூன் 13ம் தேதி வெளியாகவுள்ளதாக செய்திகள் கசிந்திருக்கிறது. மே மாதமே வெளியிட திட்டமிட்டாலும் அது முடியவில்லை.
அதற்கு காரணம் இந்த படம் தெலுங்கு, ஹிந்தி என பேன் இண்டியா படமாக வெளியாகவுள்ளது. நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தல் இந்தியா முழுவதும் ஜூன் மாதமே முடிவடைகிறது. அதை கணக்கில் கொண்டுதான் ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்திருக்கிறது.