Home latest news Kamal vs Vijay: நான் இங்க ஆட வரல! விஜயை மறைமுகமாக தாக்கிய கமல்.. தரமான...

Kamal vs Vijay: நான் இங்க ஆட வரல! விஜயை மறைமுகமாக தாக்கிய கமல்.. தரமான அடி

kamalvijay
kamalvijay

விஜயின் அரசியல் ஒரு பக்கம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்க அவரை தாக்கி பல தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. எந்தக் கூட்டணியிலும் சேர மாட்டேன் என்று விஜய் சொன்னதிலிருந்து ஒட்டுமொத்த எல்லா கட்சிகளும் விஜய்க்கு எதிராக அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் விஜயை பொறுத்தவரைக்கும் ஆரம்பத்திலிருந்து தன்னுடைய ஒரே எதிரி திமுக என்றுதான் கூறி வருகின்றார்.

அதைப்போல மத்தியில் ஆளும் கட்சியான பாஜகவை எதிர்த்தும் அவருடைய விமர்சனங்களை வைத்து வருகிறார். விஜய் ஒரு நடிகராகவும் இருப்பதால் சினிமா துறையில் இருந்தும் அவருக்கு ஆதரவாகவோ எதிராகவோ யாரும் குரல் கொடுக்க முன் வருவதில்லை. ஆதரவாக குரல் கொடுத்தால் எங்க நம் படத்திற்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்று ஒரு சில பேர் நினைக்கிறார்கள். இந்த நிலையில் விஜயை மறைமுகமாக தாக்கி ஒரு மேடையில் கமல் பேசி இருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

இதே கமல்தான் ஒரு விழா மேடையில் விஜய்க்கு விருது கொடுக்கும் பொழுது சீக்கிரம் உங்களை எதிர்பார்க்கிறோம் என கூறி அந்த விருதை விஜய்க்கு வழங்கியிருப்பார். நேற்று கமல் அவருடைய மக்கள் நீதி மையம் கட்சி சார்பாக ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்தி இருந்தார். அப்போது கீழே இருந்த ரசிகர் ஒருவர் ஒரு கேள்வி கேட்க அதற்கு கமல் கூறிய பதில் இதோ : இல்லைங்க நான் நடிக்க வரல. அந்த ரசிகர் ஒரு சினிமா ரசிகர்.

அதாவது சதிலீலாவதி படத்தில் கோயம்புத்தூர் பாஷையில் அற்புதமாக பேசி நடித்திருப்பார் கமல். அதை நேற்று அந்த மேடையில் பேச சொல்லி அந்த ரசிகர் கேட்க அதற்கு கமல் இல்லைங்க நான் நடிக்க வரல. அதை பாக்கணும் என்றால் யூடியூபில் அந்த படத்தை போட்டு பாருங்க. இங்கே உங்கள் எதிர்காலத்தை மட்டும் பற்றி பேச வந்திருக்கிறேன். இங்கே என்னை நடிக்க சொல்லாதீங்க. டான்ஸ் ஆட சொல்லாதீங்க.

இங்கே பாட சொல்லாதீங்க. அப்படி நான் பாடணும் ஆடணும் என்றால் டிக்கெட் வாங்கிக்கோங்க. நான் வந்தது அந்த வேலையெல்லாம் நிறுத்தி வைத்துவிட்டு வந்திருக்கிறேன். இன்னைக்கு ஏதோ ஒரு கோடியில் பிடிபட்டது என்று சொல்கிறார்கள். நான் ஒரு நாள் வேலை செய்தால் அந்த கோடியை நான் சம்பளமாக பெற முடியும். யார்கிட்ட கதை விடுகிறீர்கள் என மிக ஆக்ரோஷமாக அந்த மேடையில் பேசியுள்ளார். இதை நெட்டிசன்கள் விஜயை மறைமுகமாக தாக்கி கமல் பேசியதாக இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

Previous articleVaranasi: வாரணாசி படத்தில் என் கேரக்டர் வேறலெவல்!. ஹைப் ஏத்தும் மகேஷ் பாபு!..
Next articleஇளையராஜாவையே மொத்தமாக மாற்றிய பாக்யராஜ்!… செம பிளாஷ்பேக்!…