More
Categories: Cinema News latest news

ரஜினி, விஜய் ரெண்டு பேரும் ஓரமா போங்க!.. மேல ஒருத்தர் இருக்கார்!.. கொளுத்திப்போட்ட ரோபோசங்கர்…

சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு என்று பெரும் பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில், நடிகர் ரோபோ சங்கர் புதிய பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் ஒரு கருத்தை கூறியுள்ளார். விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அவரது ரசிகர்களும், ரஜினி தான் எப்போதும் சூப்பர் ஸ்டார் என்று ரஜினியின் ரசிகர்களும் அடித்துக்கொண்டிருக்கின்றனர்.

சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் இதுதான் ஹாட் டாப்பிக். நடிகர் விஜயின் படம் தான் அதிகமாக வசூல் செய்கிறது. எனவே அவர் தான் சூப்பர் ஸ்டார் என்று சிலர் கூறி வருகின்றனர். இந்த பிரச்சனை தொடர்பாக சினிமா பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertising
Advertising

இதையும் படிங்க- இத்தனை ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரரா நாகார்ஜூன்?!.. மனுஷன் சைலண்டா இருக்காரே!…

இந்நிலையில் இந்த பிரச்சனை குறித்து நடிகர் ரோபோ சங்கர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் ரோபோ சங்கரிடம் விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்று சிலர் கூறுகிறார்களே, இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டனர்.

அதற்கு அவர்  சூப்பர் ஸ்டார் என்றால் தலைவர் ரஜினிகாந்த் மட்டும் தான். விஜய் தான் தளபதி. இதை யாராலும் மாற்ற முடியாது. அடுத்த தலைமுறையினருக்கு விஜய், அஜித்தை பிடிக்கும். அதற்கடுத்த தலைமுறைக்கு வேறு நடிகர்களை பிடிக்கும்.

ஆனால் சூப்பர் ஸ்டார் என்பது ரஜினிகாந்த் அவர்கள் தான். அது அவருடைய பட்டம். நடிகர் விஜய்க்கு தளபதி என்ற பட்டம் உள்ளது. ஆனால் இவர்களுக்கெல்லாம் மேலே ஒருவர் இருக்கிறார். அவர் தான் எங்களுடைய ஆண்டவர். உலக நாயகன் கமல ஹாசன் எல்லாரும் மேலே இருக்கிறார். எல்லாவற்றையும் அவர் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே எல்லா பக்கமும், ரஜினியா விஜயா என்ற பிரச்சனை போய்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இவர்களுக்கெல்லாம் மேலே கமல் இருக்கிறார் என்று புதிதாக ஒரு பஞ்சாயத்தை ஏற்படுத்தும் வகையில் ரோபோ சங்கர் பேசியுள்ளார்.

இதையும் படிங்க-சொல்றதையும் செய்வேன்! சொல்லாததையும் செய்வேன் – ஹுக்கும்! கண்டம் தாண்டி மாஸ் காட்டிய ரஜினி

Published by
prabhanjani

Recent Posts