இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே!.. கமலும் சிவகார்த்திகேயனும் இணையும் புதிய படம்...

by சிவா |   ( Updated:2022-01-15 15:57:44  )
kamal
X

நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தொடர்ந்து திரைப்படங்களை தயாரித்து வருகிறார். பெரும்பாலும் அவர் நடிக்கும் படங்களை மட்டுமே அவர் தயாரித்து வந்தார். தற்போது மற்ற நடிகர்களை வைத்தும் அவர் படங்களை தயாரிக்க துவங்கியுள்ளார்.

ஏற்கனவே விக்ரமை வைத்து கடாரம் கொண்டான் என்கிற படத்தை தயாரித்தார். அதற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவரே நடிக்கும் விக்ரம் படத்தை தயாரித்து வருகிறார்.

kamal

இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தையும் அவர் தயாரிக்கவுள்ளார். இது ராஜ்கமல் பிலிம்ஸின் 21வது திரைப்படமாகும். இப்படத்தை கமலோடு இணைந்து சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் நிறுவனமும் தயாரிக்கவுள்ளது. இப்படத்தை ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார்.

kamal

இந்த அறிவிப்பை கமல்ஹாசன், அவரின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் என அனைவரும் தங்களின் டிவிட்டர் பக்கத்திலும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளனர்.

twit

Next Story