உதவி கேட்ட மேக்கப் மேனைக் கடுமையாகத் திட்டிய கமல்… இப்படி எல்லாமா நடந்தது?

kamal
Kamal Hassan: கமல் நடித்த குருதிப்புனல், இந்தியன் படம் வரைக்கும் கமல் சாருக்கு மேக்கப் மேனாக புஜ்ஜி பாபு இருந்துள்ளார். அவர் கமலுடன் பணியாற்றியபோது நடந்த அனுபவங்களை இப்படி பகிர்ந்துள்ளார்.
குருதிப்புனல், இந்தியன் படங்களில் கமலுக்கு மேக்கப் மேனாக பணியாற்றிய நேரத்தில் வீட்டில் பணம் இல்லை. சினிமா படப்பிடிப்பிலும் தடங்கல் ஏற்பட்டது. எனது பெரிய மகள் எம்சிஏ. படித்துக் கொண்டு இருந்தார். யாரிடம் பணம் கேட்பதுன்னு தெரியவில்லை. கமல் சாரிடம் கேட்கலாம் என முடிவு செய்தேன். அவரைப் போய் சந்தித்தேன்.
பெரிய பாப்பா படிக்கிறாங்க. அவங்களுக்கு பீஸ் கட்டணும். பண உதவி செய்யுங்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் மிக கடுமையாகத் திட்டிப் பேசினார். அது மன வருத்தமாக இருந்தது. இவ்வளவு கஷ்டப்பட்டு ஏன் இவங்க கிட்ட அடிமையா வேலை செய்யணும்னு தோணுச்சு. அதன்பிறகு அவர் படங்களில் மேக்கப் போடப் போவதில்லை என முடிவெடுத்ததாக புஜ்ஜி பாபு தெரிவித்துள்ளார்.

கமல் படங்களில் மட்டும் அல்லாமல் புஜ்ஜி பாபு ரஜினி, பிரசாந்த், விஜய், சந்தானத்துக்கும் மேக்கப் மேனாகப்; பணி புரிந்துள்ளார். விக்ரம் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் நடந்தது. அங்கு மேக்கப்புக்காக என்னை கமல் சார் அழைத்தார். நான் போகவில்லை. மறுத்துவிட்டேன் என்றும் புஜ்ஜிபாபு தெரிவித்துள்ளார்.
கமலைப் பொருத்தவரை பலருக்கும் உதவி செய்யக்கூடியவர் தான். தன் பிறந்தநாளின் போது ஆண்டுதோறும் ரத்தத்தானம் செய்யுங்கன்னு ரசிகர்களுக்குக் கட்டளை மட்டும் போடாமல் அந்தத் திட்டத்தைத் தானே ரத்ததானம் செய்து தொடங்கி வைத்தார். அது மட்டும் அல்லாமல் உடல் தானம் செய்து மற்ற நடிகர்களுக்கு முன்னோடியாக இருந்தவர் என்றால் அது கமல் தான். அப்படி இருக்கும் அவரா இந்த சின்ன உதவிக்குக் கோபப்;பட்டு திட்டுவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுகிறது.