கமல் படத்துக்காக விடிய விடிய தூங்காமல் இருந்த இயக்குனர்... அதான் படம் சூப்பர்ஹிட்டா?

by sankaran v |
kamal
X

#image_title

ஒரு படத்தின் இயக்குனர் எந்தளவுக்கு பொறுப்பாக செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருப்பவர் கேஎஸ்.ரவிக்குமார். படப்பிடிப்பைத் தாண்டி அதற்கான முன்னேற்பாடுகளிலும் எந்தளவுக்கு கவனம் செலுத்துவார் என்பதை அவரது உதவி இயக்குனர்களில் ஒருவர் இப்படி தெரிவித்துள்ளார்.

தசாவதாரம் படப்பிடிப்பில் கமல் பத்து அவதாரங்களை ஏற்று நடித்து இருந்தார். அவற்றில் பல்ராம் நாயுடுவின் கதாபாத்திரம் கலைஞர் அரங்கத்தில்தான் படமாக்கப்பட்டது. மறுநாள் காலையில் அந்தப் படப்பிடிப்பு தொடங்க வேண்டும். முதல் நாள் காலையில் அந்த செட் தயாராகவில்லை. தன்னுடைய உதவி இயக்குனரிடம் செட்டைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி பொறுப்பை ஒப்படைத்து விட்டு கேஎஸ்.ரவிக்குமார் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

இரவு 12 மணிக்கு கேஎஸ்.ரவிக்குமாரிடம் இருந்து அந்த உதவி இயக்குனருக்குப் போன் வருகிறது. 'செட் ரெடியாகிடுச்சா?'ன்னு கேட்டார். 'இல்ல சார். இன்னும் ரெண்டு, மூணு மணி நேரத்துக்குள்ள செட் தயாராகிவிடும். தொடர்ந்து அவங்க வேலை செஞ்சிக்கிட்டு இருக்காங்க'ன்னு சொன்னாரு. விடியற்காலை 3 மணிக்கு போன் போட்டு கேட்கிறார். அப்புறம் 4, 5 மணிக்கும் கேட்கிறார். பின்னர் 6 மணிக்கு நேராக லொகேஷனுக்கே வந்து விடுகிறார்.

dasavatharam ksr

#image_title

7 மணிக்கெல்லாம் அந்த செட் ரெடியானது. கமல் 5 மணிக்கே வந்து விட்டார். 4 மணி நேரம் மேக்கப் போட்டார். 9 மணிக்கு தயார் ஆனார். 9 மணிக்கு படப்பிடிப்பு தொடங்கியது. அன்று காலை 9 மணிக்கு நாங்கள் படப்பிடிப்பு தொடங்கினோம் என்றால் அதற்கு முக்கிய காரணம் தொடர்ந்து முதல் நாள் இரவில் கே.எஸ்.ரவிக்குமார் சார் செட்டைப் பற்றி விசாரித்துக் கொண்டு இருந்ததுதான் என்று ஒரு கட்டுரையில் அந்த உதவி இயக்குனர் பதிவு செய்துள்ளார்.

ஒரு இயக்குனரின் வேலை என்பது கதை, நடிகர்கள் தேர்வு செய்வது, படப்பிடிப்பு நடத்துவதோடு மட்டும் அவரது வேலை முடிந்துவிடுவதில்லை. ஒரு படத்தின் உருவாக்கத்திற்குப் பின்னால் எந்தளவுக்கு ஒரு இயக்குனர் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணம் கே.எஸ்.ரவிக்குமார் என்பதைத் தான் இந்த சம்பவம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பகிர்ந்துள்ளார்.

Next Story