கமலுக்கு செல்ல வேண்டிய படத்தை ஆட்டைய போட்ட முன்னணி நடிகர்…. செம வெவரம்தான்!..

Kamalhassan: தமிழ் சினிமா இயக்குனர்கள் சில கதைகளை குறிப்பிட்ட நடிகர்களுக்காக தான் எழுதுவார்கள். கடைசியில் நடுவில் வரும் ஒரு நடிகர் கதை பிடித்து போய் அதை தட்டி சென்றுவிடுவார்கள். கமல் விஷயத்தில் அப்படி ஒரு சம்பவமும் தற்போது நடந்து இருக்கிறது.

புதுக்கதைகளை முயற்சி செய்து பார்ப்பதில் வித்தகர் கமல்ஹாசன் தான். அவரின் படங்களில் புதுமை என்னைக்குமே மிஸ் ஆகவே ஆகாது. அதனாலே இயக்குனர்களும் வித்தியாசமான கதைக்கு கமல்ஹாசனிடமே போய் நிற்பார்கள். அப்படி ஒரு கதையாக உருவானது தான் ஜீனி திரைப்படம்.

இதையும் படிங்க: மேக்கப் டெஸ்ட் எடுத்தும் நடிக்காமல் போன விஜயகாந்த்!… அவமானத்தில் நொந்துபோன கேப்டன்!..

ஃபாண்டசி படமான இப்படத்தினை முதலில் கமல்ஹாசனுக்காக தான் அப்படத்தின் இயக்குனர் அர்ஜூனன் எழுதி இருக்கிறார். ஆனால் எதிர்பாராத விதமாக இந்த கதையை கேட்ட ஜெயம் ரவி, கொஞ்சமும் யோசிக்காமல் நான் தான் உங்கள் ஜீனி எனக் கூறிவிட்டாராம். அதை தொடர்ந்து கமல்ஹாசனிடம் இந்த கதையை சொல்ல முடியாமல் போக ஜெயம் ரவியே நடிக்க முடிவானது.

தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் வன்முறை, ரத்தம், போதை, கடத்தல் என்ற எந்த விஷயமும் இல்லாத ப்ரெஷ் படமாக இது இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த படத்தினை வேல் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. அகிலன், இறைவன், சைரன் என எல்லா படங்களுமே வசூலில் தோல்வி அடைந்தது.

இதையும் படிங்க: நைட்டு ஃபுல்லா வேற படம்!.. பகலில் சின்னக்கவுண்டர்!.. விஜயகாந்த் எனர்ஜியை பார்த்து மிரண்டு போன பிரபலம்…

இதை கருத்தில் கொண்டு தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் அதிக கவனம் செலுத்திவருகிறார் ரவி. அவர் நடிப்பில் காதலிக்க நேரமில்லை, பிரதர் படங்களின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதை தொடர்ந்து தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தின் வேலைகளும் தொடங்க இருக்கிறது. தக் லைஃப் படத்தில் இருந்து விலகி இருக்கும் ரவி அடுத்தடுத்து சில படங்களையும் இயக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story