அடடா... எல்லா படமும் சூப்பர்ஹிட்டாச்சே..! வந்து இருந்தா வேற லெவல் கமலைப் பார்த்திருக்கலாமே!

kamal
கமல் நடித்தாலே அந்தப் படத்தில் ஏதாவது ஒரு புதுமை செய்திருப்பார். அந்தக் கோணத்தில் தான் ரசிகர்கள் படம் பார்க்க செல்வார்கள். ஆனால் பெரும் எதிர்பார்ப்புடன் ஆரம்பித்து கமல் நடிப்பில் பாதியில் நின்று போன படங்களும் உள்ளன. அந்தப் பட்டியலைப் பட்டியலைப் பார்ப்போமா...
மர்மயோகி
தசாவதாரம் படத்துக்குப் பிறகு மர்மயோகி என்ற படம் வருவதாக இருந்தது. இந்தப் படத்தைக் கமல் நடித்து இயக்குவதாக இருந்தது. அகோரி கதை. சங்கு, கஞ்சா என வலம் வரும் வகையில் எடுக்கப்பட்டது. அந்த சமயத்தில் பாலாவின் நான் கடவுள் படமும் எடுக்கப்பட்டு வந்ததால் இரண்டும் ஒரே கதையாக உள்ளது என மர்மயோகி படத்தை நிறுத்தி வைத்தாராம் கமல்.
மருதநாயகம்

maruthanayagam
மருதநாயகம் படத்தின் பாடல் ஒன்று வெளியானது. பெரும் வரவேற்பு கிடைத்தது. யூசுப்கான் என்ற பெயரில் கூலிப்படைத்தலைவன், மதம் மாறுவது என ராஜதந்திரங்களுடன் படத்தின் கதை அமைந்து இருந்தது. கீழ் ஜாதி, மேல் ஜாதி என பாகுபாடு உள்ள காலகட்டத்தில் படத்தின் சூட்டிங் சில நாள்கள் நடைபெற்றது. இங்கிலாந்து ராணி வந்து படத்தின் சூட்டிங்கைத் தொடங்கி வைத்தார். இந்தப் படத்தில் கமலின் நடிப்பும் கெட்டப்பும் பிரமாதமாக இருந்தது. பொருளாதார சிக்கல் காரணமாக படம் நின்று போனது.
டாப் டக்கர்
பாரதிராஜாவின் இயக்கத்தில் கமல் நடிப்பதாக இருந்த படம் டாப் டக்கர். பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இந்தப் படம் எடுக்கலாம் என்று இருந்த வேளையில் கமல் ரொம்பவே பிசியாக இருந்தாராம். சில காரணங்களால் படம் கைவிடப்பட்டது.
லண்டனில் காமேஸ்வரன்
கமல் நடித்து இயக்குவதாக இருந்த படம். 1990ல் எழுதிய கதை இது. படத்தின் படப்பிடிப்புக்குத் தயாராக இருந்தார்கள். ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்தப் படம் சில காரணங்களால் நின்று போனது.
லேடீஸ் ஒன்லி
தமிழில் வெளியான கமலின் மகளிர் மட்டும் படத்தின் இந்தி ரீமேக் லேடீஸ் ஒன்லி என்ற பெயரில் வெளியாக இருந்தது. தமிழில் நாகேஷ் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் கமல் நடிப்பதாக இருந்தது. இதுவும் சில காரணங்களால் பாதியில் நிறுத்தப்பட்டது.
சபாஷ் நாயுடு
இது மிக அருமையாக எடுக்கப்பட்டது. பட பூஜையும் சிறப்பாக நடந்தது. கமல், மாதவன் உள்பட பலர் நடித்தனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் பல மொழிகளில் ரிலீஸ் பண்ணுவதாக இருந்தது. தசாவதாரம் படத்தில் வரும் பல்ராம் நாயுடு கேரக்டரைக் கொண்டு எடுக்கப்பட்ட படம். மோஷன் போஸ்டரையும் வெளியிட்டனர். பட்ஜெட் எகிறிய காரணத்தால் படம் எடுக்க முடியாமல் போனது.
ரோபோ
ஷங்கரின் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் எந்திரன். இதுல முதல்ல கமல் நடிப்பதாகவே இருந்தது. சூட்டிங்கும் நடைபெற்றது. இதுவும் என்ன காரணத்தாலோ பாதியில் நின்று போனது. இதுல கமல் நடித்து இருந்தால் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் எகிறி இருக்கும்.
கபர்தார்
அமிதாப், கமல், ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா உள்பட பலர் நடித்த இந்திப்படம் கபர்தார். இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்தது. ஆனால் சில காரணங்களால் படம் பாதியில் நின்று போனது. இதுல கமல் நடித்து இருந்தால் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் இடம்பிடித்து இருக்கும்.
தலைவன் இருக்கின்றான்

thalaivan irukindran
இந்தப் படத்தின் பூஜை நடந்தது. கமலும், லைகா நிறுவனமும் தயாரிப்பதாக இருந்தது. ஜனநாயகத்தை வைத்து அரசியல் களத்தை மையமாகக் கொண்டு முதல்வன் படம் மாதிரி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் நின்று போனது.
அதிவீரராமபாண்டியன்
இளையராஜா தான் இசை அமைப்பாளர். இந்தப் படத்தின் சூட்டிங்கும் பாதியில் நின்று போன படம் அதிவீரராமபாண்டியன். தேவர்மகன் படத்தில் வந்த சாந்து பொட்டு பாடல் இந்தப் படத்துக்காகவே எழுதப்பட்டது. அதன் மறு உருவமாக எடுக்கப்பட்ட படம்தான் தேவர்மகன் என்றும் சொல்கிறார்கள்.