தமிழ் சினிமாவே வியந்து பார்க்கும் கூட்டணி இதுதான்பா.! கமலுக்கு வாழ்த்துக்களா? அனுதாபங்களா?

சில கூட்டணிகள் நடந்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பர். ஆனால், படம் எதிர்பார்த்த வெற்றியை அடையாது. ஆனால், சில கூட்டணிகளை ஏண்டா சேர்ந்தார்கள் என நினைத்திருப்போம். ஆனால் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி விடும். அதற்கு அண்மைக்கால உதாரணம் விவேகம் முதல் உதாரணம். இரண்டாவதுக்கு விஸ்வாசம் தான்.
அப்படி ஒரு சினிமா கூட்டணி தான் அண்மையில் பேசி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாம். ஆம், கிராமத்து கதைக்களங்களை, தான் பார்த்து வளர்ந்த சமூகத்தை பற்றி முழுக்க முழுக்க ஆக்சன், குடும்ப சென்டிமென்ட் கதைக்களமாக எடுத்து ஹிட் கொடுத்த இயக்குனர் தான் முத்தையா.
தற்போது கார்த்தி உடன் கொம்பன் படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்து விருமன் படத்தை இயக்கி முடித்துவிட்டார். மே மாதம் இப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது. அடுத்து முத்தையா யாரை இயக்க போகிறார் என எதிர்பார்க்கையில் யாரும் எதிர்பார்க்காத கமல்ஹாசனை சந்தித்து கதை கூறி ஓகே வாங்கிவிட்டாராம்.
இதையும் படியுங்களேன் - 10 கோடி கொடுத்தால் ஓகே.! இல்லனா நோ.! அதிர வைத்த நயன்தாரா.!
இதற்கு கமல்ஹாசன் சம்மதம் தெரிவித்து கால்ஷீட் ஒதுக்கியது தான் கோலிவுட்டின் ஹாட் செய்தி. கமல் இந்த படத்திற்காக 25 முதல் 30 நாள் கால்ஷீட் தருவாராம். அதற்குள் படத்தை இயக்கி முடிக்க வேண்டும் என்பது கமலின் உத்தரவாம். ஏற்கனவே முத்தையா அப்படித்தானே படம் எடுத்து வருகிறார்.
கிட்டத்தட்ட 40 நாளில் விருமன் ஷூட்டிங் மொத்தமாக முடிந்து போனது. அதே போல கமல்ஹாசன் படத்தையும் விறுவிறுவென முடிக்க திட்டமிட்டுள்ளாராம். விரைவில் கமல் - முத்தையா இணையும் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.