’விக்ரம்’ கூட்டணியை வைத்தே வாழ்க்கையை ஓட்டிருவாரு போல கமல்...! உருவாகும் அடுத்த கூட்டணி..!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவான படம் விக்ரம். இந்த படத்தில் கமலுடன் விஜய்சேதுபதி, பகத்பாசில் , நரேன் உட்பட பலரும் நடித்தனர். படம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
யாரும் எதிர்பாராத ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.அதுவும் கமலின் கெரியரில் நினைச்சு கூட பாக்காத வகையில் மாபெரும் வெற்றி பெற்ற படமாக இந்த விக்ரம் விளங்குகிறது. லோகேஷ் ஒவ்வொரு காட்சியிலும் கமலை செதுக்கியுள்ளார் என்றே சொல்லவேண்டும்.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கமலை தேடி தமிழ் சினிமாவே படையெடுத்து கொண்டு வருகிறது. மேலும் கமல் புரடெக்ஷனாக ராஜ்கமல் புரடெக்ஷனும் ஒவ்வொரு நடிகர்களையும் குறிவைத்துக் கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் கமலின் இந்த வெற்றியால் இவரின் அந்த கால படங்களின் இரண்டாம் பாகம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. இந்தியன் - 2. தேவர் மகன் - 2, போன்ற படங்களின் மீது சினிமாவின் பார்வை விழுந்துள்ளது. ஏற்கெனவே தேவர் மகன் - 2வில் கமலுக்கு மகனாக விஜய் சேதுபதியை அணுகியதாக தகவல் வெளியானது. அதே வரிசையில் இந்தியன் - 2வில் வில்லனாக விஜய்சேதுபதியை நடிக்கவைக்கலாம் எனவும் பேசிவருகிறதாம். ஏதோ சினிமாவில் வேற ஆளே இல்லாத மாதிரி விஜய் சேதுபதியையே குறிவைக்கிறது கமலின் நலன் விரும்பிகள்.