சூர்யாவால் விக்ரமை தட்டிக் கழித்த கமல்! என்ன இருந்தாலும் ரோலக்ஸ் ஏற்படுத்திய தாக்கம் குறைஞ்சிருக்காதுல?
Actor Kamal : தமிழ் சினிமாவில் விஜய் , அஜித் இவர்களுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர்கள் நடிகர் விக்ரம் மற்றும் சூர்யா. இருவரும் சேர்ந்து பிதாமகன் என்ற படத்தில் நடித்திருந்தார்கள். அந்தப் படத்தில் இருவரின் கதாபாத்திரமும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவே அமைந்தது.
அதன் பிறகு இருவரின் மார்கெட் உயரவே அடுத்தகட்ட போட்டியாளராக மக்கள் மத்தியில் அறியப்படுகிறார்கள். விக்ரமை போலவே சூர்யாவும் கதைக்கு ஏற்றவாறு விதவிதமான கெட்டப்களை போட்டுக் கொண்டு ரசிகர்களை பிரமிக்க வைத்து வருகிறார்.
இதையும் படிங்க : இப்படி ஆகணும்னு நினைச்சேன்.. வடிவேலு கூட சேர்ந்து தப்பு பண்ணிட்டேன்!… புலம்பும் காமெடி நடிகர்…
இந்த நிலையில் சூர்யாவால் விக்ரம் படத்திற்கு திடீர் சிக்கல் எழுந்துள்ளது. அதாவது நேற்று முன்தினம் விக்ரம் நடிப்பில் உருவாக இருந்த திரைப்படம் மகாவீர் கர்ணா. இந்த படத்தை விமல் இயக்குவதாக இருந்தது. ஆரம்பகட்ட படப்பிடிப்புகள் 2019 ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு விட்டது.
ஆனால் அதன் பிறகு விக்ரமுக்கு பல படங்களின் வாய்ப்புகள் தொடர்ச்சியாக வர மகாவீர் கர்ணா திரைப்படத்தை கண்டுகொள்ளவே இல்லையாம். இதனால் இப்போது அந்தப் படத்திற்காக தன் சம்பளத்தை மூன்று மடங்கு உயர்த்தியிருக்கிறாராம் விக்ரம். இதனால் முதலில் இருந்த தயாரிப்பாளர் வேறொரு தயாரிப்பாளரை வைத்து படத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி விலகிவிட்டாராம்.
இதையும் படிங்க : இந்த படமாவது ஹிட் அடிக்குமா?.. மேடையில் கண் கலங்கிய சித்தார்த்!.. என்ன சொன்னார் தெரியுமா?,,
உடனே விக்ரம் ஏற்கனவே கமலின் ராஜ்கமல் நிறுவனம் என்னை வைத்து ஒரு படம் பண்ண வேண்டும் என கேட்டுக் கொண்டிருப்பதாகவும் இந்தப் படத்தை அவர்களிடம் போய் கூறுங்கள் என்றும் சொல்லி அனுப்பியிருக்கிறார்.
அங்கு இந்தப் படத்தின் கதையை கேட்ட நிறுவனம் இதே கதையில் ஹிந்தியில் சூர்யா நடிப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறதே? மீண்டும் நாங்கள் எப்படி தமிழில் எடுக்க முடியும் என்று கைவிரித்து விட்டார்களாம்.
இதையும் படிங்க : கர்ண கொடூரமா இருக்கே!.. இதுக்கு கார்ட்டூன் சேனலே பார்க்கலாம் போல.. டீசரே இப்படின்னா?..
ஆனால் இதை பற்றி சூர்யா அலுவலகத்தில் கேட்டதற்கு அப்படியெல்லாம் ஹிந்தியில் படம் நடிக்க வில்லை என்று கூறியிருக்கிறார்கள். அப்புறம் ஏன் ராஜ்கமல் நிறுவனத்தில் இருந்து அப்படி சொன்னார்கள் என்று புரியாமல் திகைத்தார் இயக்குனர்.
அதுமட்டுமில்லாமல் லைக்கா நிறுவனத்திடமும் கேட்டிருக்கிறார்கள். அவர்களும் விக்ரமின் சம்பளம் மற்றும் படத்திற்கான மற்ற வேலைகள் என பட்ஜெட் அதிகமாகும் என அவர்களும் கைவிரித்து விட்டார்களாம். என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து போயிருக்கிறார் மகாவீர் கர்ணா படத்தின் இயக்குனர்.