இந்தியன் 2-வுக்கு நீங்கதான்!.. கமல் எடுத்த முயற்சி!. கவுத்துவிட்ட ஷங்கர்!. ரஹ்மான் சொன்னது இதுதான்!
Indian2: ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன், சுகன்யா, ஊர்மிளா, மனிஷா கொய்ராலா, கவுண்டமணி என பலரும் நடித்து 1996ம் வருடம் வெளிவந்த திரைப்படம்தான் இந்தியன். ஒரு வயதான சுதந்திர போராட்ட வீரர் லஞ்சத்திற்கு எதிராக வெகுண்டு எழுவதுதான் கதை. இந்த கதைக்கு மிகவும் நேர்த்தியாக ரசிக்கத்தக்க வகையில் திரைக்கதை அமைத்திருந்தார் ஷங்கர்.
இந்த படத்திற்கு அற்புதமான பாடல்களையும், பின்னணி இசையையும் கொடுத்திருந்தார் ஷங்கர். இந்த படத்தில் இடம் பெற்ற அத்தனை பாடல்களுமே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ஆனால், இந்தியன் 2 படத்தை துவங்கியபோது ஏ.ஆர்.ரஹ்மான் இல்லாமல் அனிருத் என்கிற அறிவிப்பு வெளியானது.
இதனால், ரஹ்மான் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ரஹ்மான் அளவுக்கு அனிருத்தால் இசையமைக்க முடியாது என்பது அவர்களின் வாதமாக இருந்தது. அவர்கள் என்ன சொன்னார்களோ.. அதுதான் இப்போது நடந்திருக்கிறது. இந்தியன் 2 வில் அனிருத் இசையைத்த 2 பாடல்கள் வெளியானது. ஆனால், அந்த பாடல்கள் ரசிகர்களை கவரவில்லை.
இந்நிலையில்தான், இந்தியன் 2 படம் துவங்கியது ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசையமைக்க வேண்டும் என கமல்ஹாசன் விரும்பியது இப்போது தெரியவந்திருக்கிறது. ஏனெனில் இந்தியன் பட வெற்றிக்கு ரஹ்மானின் இசை முக்கிய காரணம் என்பது கமலுக்கு நன்றாகவே தெரியும்.
அவரே ரஹ்மானை தொடர்பு கொண்டு ‘இந்தியன் 2-வுக்கு நீங்கள்தான் இசையமைக்க வேண்டும்’ என கேட்டப்போது ‘எனக்கும் விருப்பம்தான். ஆனால், இயக்குனர் என்னை தொடர்பு கொள்ளவில்லை’ என சொல்லி இருக்கிறார் ரஹ்மான். எனவே, அதை அப்படியே விட்டுவிட்டாராம் கமல். இதுபற்றி ரஹ்மானே விளக்கம் அளித்திருக்கிறார்.
ஷங்கர் என்னிடம் வேலை செய்தாலும் இடையில் அந்நியன், நண்பன் ஆகிய படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜுடன் வேலை செய்தார். அதன்பின் எந்திரன் மற்றும் 2.0 என்னுடன் வேலை செய்தார். ஒரு இடைவெளி விட்டு ஒரு இசையமைப்பாளருடன் இணையும்போது அது ஹிட் அடிக்கும் என்பது அவரின் நம்பிக்கையாக இருக்கலாம். அதனால், இந்தியன் 2-வுக்கு அனிருத்தை அவர் தேர்ந்தெடுத்திருக்கலாம். அது அவரின் முடிவு. எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. எப்போதும் இருவரும் நல்ல நண்பர்களே’ என முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்தியன் 2 பாடலை கேட்கும்போது கண்டிப்பாக இந்தியன் 3 படத்திற்கு ரஹ்மானே இசையமைப்பார் என்கிற செய்தியும் ஒருபக்கம் ஓடி வருகிறது.