சிவக்குமார் நடிக்க மறுத்த கதை!. கமலை வச்சி அதகளம் பண்ணிய பாரதிராஜா.. அட அந்த படமா!..

Published on: November 8, 2023
sivakumar
---Advertisement---

Sigappu rojakkal: 1960களில் தம்பி, மகன் போன்ற சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து 80களில் ஹீரோவாக மாறியவர் சிவக்குமார், அன்னக்கிளி, பத்திரகாளி, சிட்டுக்குருவி, புவனா ஒரு கேள்விக்குறி, கவிக்குயில், ரோசாப்பு ரவிக்கைக்காரி, வண்டிச்சக்கரம், அக்னி சாட்சி, சிந்து பைரவி என பல திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் இவர்.

சினிமா உலகில் எந்த கெட்டப்பழக்கமும் இல்லாமல் கடைசி வரை கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் கடைபிடித்த சில நடிகர்களில் சிவக்குமார் முக்கியமானவர். 90களுக்கு பின் குணச்சித்திர நடிகராக மாறினார். பல திரைப்படங்களிலும் அப்பா வேடத்தில் அசத்தியிருக்கிறார்.

இதையும் படிங்க: ஓவியராக ஆசைப்பட்ட சிவக்குமார் நடிகரானது எப்படி தெரியுமா?!.. ஒரு சுவாரஸ்ய தகவல்!…

இயக்குனர் பாலா இயக்கிய முதல் படமான சேதுவில் விக்ரமின் அண்ணனாக நடித்திருந்தார். பாரதிராஜா இயக்கிய பசும்பொன் படத்தில் அற்புதமான வேடத்தில் அசத்தியிருப்பார். சினிமாவில் வருவதற்கு முன் ஒரு ஓவியராகவும், பெயிண்டராகவும் ஆக வேண்டும் என்பதுதான் சிவக்குமாரின் ஆசையாக இருந்தது.

ஆனால், கல்லூரியில் ஒரு நாடகத்தில் நடிக்கப்போய் நடிப்பின் மீது அவருக்கு ஏற்பட்டு சினிமாவில் நுழைந்தார். சமீபத்தில் பாரதிராஜாவின் மகன் மனோஜ் இயக்கும் ஒரு புதிய படத்தின் விழாவில் கலந்து கொண்டு பாரதிராஜா பற்றிய பல நினைவுகளையும் சிவக்குமார் பகிர்ந்து கொண்டார்.

இதையும் படிங்க: இவங்களே சோலியை முடிச்சுடுவாங்க போல! ரசிகர்களின் செயலால் அப்செட்டில் சூர்யா – கோவத்தில் கத்திய சிவக்குமார்

பாரதிராஜா என் வீட்டுக்கு அருகே வசித்து வந்தார். பதினாறு வயதினிலே படம் முடிந்ததும் என்னிடம் வந்து ஒரு கதை சொன்னார். ஆனால், ‘எனக்கு இந்த கதை செட் ஆகாது’ என சொல்லி நடிக்க மறுத்துவிட்டேன். அதன்பின் அதே கதையில் கமலை வைத்து இயக்கினார். அதுதான் இப்போதும் பேசப்படும் சிகப்பு ரோஜாக்கள். கமல் அதில் அற்புதமாக நடித்திருந்தார்.

அதன்பின் பல வருடங்கள் கழித்து பசும்பொன் படத்தில் ‘சிவாஜி, பிரபு, அப்புறம் உன்னுடைய கதாபாத்திரம் என எல்லாத்தையும் சொல்றேன். உனக்கு எது பிடிச்சிருக்கோ அத பண்ணு’ என சொன்னார். அதனால், அந்த படதில் நடித்தேன்’ என சிவக்குமார் கூறினார்.

இதையும் படிங்க: சத்யராஜுக்காக சிபாரிசு செய்தேன்!.. கடைசில சீரியலுக்கு வந்ததுதான் மிச்சம்!.. புலம்பும் சிவக்குமார்..

 

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.