கமல் சிம்பிளா முடிச்சாரு.. ஆனால் ரஜினிகாந்த் போட்ட சீன் இருக்கே… பிரபல நடிகரையே மிரட்டிய சம்பவம்
Kamalhassan: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் என இருவரும் ஒரு நிகழ்ச்சிக்கு வந்துவிட்டால் அது சூப்பர் ஹிட் தான்.. அந்த வகையில் முக்கிய படத்தின் விழா ஒன்றில் இருவரையும் அழைக்க போக அவர்கள் நடந்து கொண்ட விதம் குறித்து பிரபல நடிகர் பிரபு தெரிவித்திருப்பது வைரலாகி வருகிறது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனும், நடிகருமானவர் பிரபு. இவர் இன்னமும் கோலிவுட்டில் நடித்து வருகிறார். இவருடைய மகன் விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உருவாகி இருக்கிறார். இவருடைய முதல் திரைப்படம் கும்கி. இப்படத்தை பிரபு சாலமன் இயக்கியிருந்தார்.
இதையும் படிங்க: விஜய் அரசியலால் கோட் படத்துக்கு சிக்கலா? தயாரிப்பாளர் சொல்வது என்ன?
திருப்பதி பிரதர்ஸ் சார்பில் பிரபு சாலமன் இப்படத்தை தயாரித்திருந்தார். இப்படத்தின் முதல் விழாவிற்கு ரஜினி மற்றும் கமல்ஹாசன் இருவரும் வரவேண்டும் என படக்குழு விரும்பியதாம். இது குறித்து பிரபுவை இருவரிடம் பேசக் கூறி கேட்டிருக்கின்றனர். பிரபு ரஜினிகாந்திற்கு கால் செய்து கேட்டபோது அவர் எனக்கு உடல்நிலை சரியில்லை முடியாது என மறுத்து விடுகிறார்.
பின்னர் கமலிடம் கால் செய்த பிரபு, அண்ணன் ரஜினிகாந்த் சார் வரலை. நீங்க கண்டிப்பா வந்துடனும் என கறாராக கேட்டிருக்கிறார். அதற்கு கமல்ஹாசனும் கண்டிப்பாக நான் வருகிறேன் என உறுதி கொடுத்து விடுகிறார். இருந்தும் படக்குழு கமலும் ரஜினியும் ஒரு படத்திற்கு இருந்தால் அது மிகப்பெரிய விளம்பரமாக இருக்கும் என ஆசைப்படுகின்றனர்.
இருந்தும் வரமாட்டேன் என கூறிவிட்டவரிடம் மீண்டும் எப்படி கேட்பது என பிரபு தயங்குகிறார். சரி என பத்திரிகையை வைக்கலாம் என நேரில் சென்று வைத்துவிட்டு வந்துவிடுகிறார். பின்னர் ரஜினிகாந்த் பிரபுவிற்கு கால் செய்து நான் வரமாட்டேன் என்று தானே கூறினேன். ஆனால் நீ எதற்கு பத்திரிகை வைக்க வந்தாய் என்கிறார்.
இதையும் படிங்க: ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் போல நான் இல்ல.. ஓபனாக பேசிட்டாரே!…
இல்லனே. நீங்க வரலைனாலும் பத்திரிகை வைக்க வேண்டியது முறைதானே எனக் கூறிவிடுகிறார். சரி வைத்துவிடு என எதுவும் பேசாமல் போனை கட் செய்து விடுகிறார் ரஜினிகாந்த். ஒருவேளை கோபித்துக் கொண்டாரோ என பிரபுவிற்கு கலக்கமாகி போய்விட்டதாம். பின்னர் அவரை சமாதானம் செய்து கொள்ளலாம் என அடுத்த நாள் விழாவிற்கு கிளம்புகின்றனர்.
அரை மணி நேரத்திற்கு முன்னர் ரஜினியின் உதவியாளர் சுப்பையாவிடமிருந்து பிரபுவிற்கு கால் வருகிறது. அதை பயந்து கொண்டே எடுத்த பிரபு கோபத்தில் இருக்கிறதா என கேட்க இல்லை என கூறிவிட்டு ரஜினிகாந்த் இடம் போனை கொடுக்கின்றனர். அவர் எங்க இருக்கீங்க என கேட்க இதோ விழாவுக்கு தான் சென்று கொண்டிருக்கிறேன் என பிரபு கூறுகிறார்.
நான் வாசலில் தான் இருக்கிறேன் உள்ளே வரலாமா என ரஜினி கேட்க பிரபுவிற்கு வாயடைத்து போய்விட்டதாம். ஒரு பக்கம் அழுகை வர யாருக்கும் எதுவும் புரியாமல் போனதாக குறிப்பிட்டு இருக்கிறார். பிரபு கொடுத்திருக்கும் இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: இவ்வளவு குழப்பமா? விடாமுயற்சி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இதுவா? வெளிவந்த பக்கா அப்டேட்