More
Categories: Cinema News latest news

மெய்யழகன் படத்தில் கமல் பாட்டு… ஆனா யாராவது இதைக் கவனிச்சீங்களா?

மெய்யழகன் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தில் கார்த்தி, அரவிந்தசாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்காக உலகநாயகன் கமல் 2 பாடல்களைப் பாடியுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக தன் படங்களில் தான் கமல் அதிகமாகப் பாடுவார். பிற நடிகர்களின் படங்களில் எப்போதாவது ஒரு சில பாடல்களைப் பாடுவதுண்டு.

அந்த வகையில் மெய்யழகன் படத்தில் கார்த்தி நடிக்கும் கேரக்டருக்காக 2 பாடல்களைப் பாடியுள்ளது ஆச்சரியமாக உள்ளது. இதற்காக சூர்யா நன்றியைத் தெரிவித்துள்ளார். கமல் பாடியதன் மூலம் படத்திற்கு தனி அந்தஸ்தும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

Advertising
Advertising

இது ரசிகர்களுக்குப் புதிய உற்சாகத்தைத் தந்துள்ளது. இதற்கு முன் அஜீத்துக்காக உல்லாசம் படத்தில் கமல் பாடினார். அதே போல ஒரு சில படங்களில் கமல் பிற நடிகர்களுக்காகப் பாடியுள்ளார்.

மெய்யழகன் படத்தை இயக்கியவர் பிரேம்குமார். இவர் 96 என்ற படத்தை இயக்கிப் புகழ் பெற்றவர். மெய்யழகன் படத்தில் ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா, சரண் உள்பட பலரும் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார்.

படத்திற்கான ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் தான் நடந்தது. இதைத் தொடர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது. ‘போறேன் நா போறேன்’, ‘யாரோ இவன் யாரோ’ என்ற இரு பாடல்களை கமல் உணர்ச்சிப்பூர்வமாக பாடியுள்ளார். இது ரெக்கார்டிங் தியேட்டரில் இருந்தவர்களையே மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவ்வளவு இனிமையாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் கமல் பாடுவாரா என்று அவர்கள் அதிசயித்துப் போனார்கள். இதே தான் சமூக வலைதளங்களிலும் பேச்சாக உள்ளது. கமல் பாடிய இந்தப் பாடல்கள் காலம் கடந்தும் பேசப்படும் என்று பலரும் தங்கள் கமெண்ட்டுகளில் சிலாகித்து சொல்கிறார்கள்.

suryakamal

அஜீத்துக்காக உல்லாசம் படத்தில் முத்தே முத்தம்மா, புதுப்பேட்டை படத்தில் நெருப்பு வாயினில் என்று ஒரு பாடலை தனுஷூக்காக கமல் பாடியுள்ளார். அமரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்காகப் பாடியுள்ளார்.

Also read: கமலுடன் நடிக்க மறுத்ததால் நிறைய படங்களில் மறுக்கப்பட்டேன்… பிரபல நடிகை சொன்ன ஷாக்

இப்படி பிற நடிகர்களுக்காகப் பாடும்போது ஒரு பாடல் தான் அதிகபட்சமாகப் பாடுவார். ஆனால் மெய்யழகனில் மட்டும் விதிவிலக்காக 2 பாடல்களைப் பாடியுள்ளார் உலகநாயகன்.

Published by
sankaran v