கமலுடன் நடிக்க மறுத்ததால் நிறைய படங்களில் மறுக்கப்பட்டேன்… பிரபல நடிகை சொன்ன ஷாக்
Kamalhassan: ஏற்கனவே மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அதிகம் இருப்பதாக ஹேமா கமிட்டியின் அறிக்கை கசிந்த நிலையில் மற்ற மொழி சினிமா துறையில் இருக்கும் சில ரகசியங்கள் தற்போது உடைந்து வருகிறது.
சினிமா என்றாலே பெண்களுக்கு பயம் என்னும் நிலைமை தற்போது பரவலாக மாறியிருக்கிறது. அதற்கு காரணம் டிஜிட்டல் மீடியாக்கள் பெரிதாகி பெண்கள் தங்களுடைய பிரச்சினைகளை எப்படியாவது வெளியுலகத்தில் சொல்லி விடுவதால் உச்சத்தில் இருக்கும் பிரபலங்கள் தங்கள் கொட்டத்தை கொஞ்சம் அடக்கி கொண்டிருக்கின்றனர்.
இதையும் படிங்க: எஸ்.பி.பி பாடததால் கிடைத்த பாட்டு!.. மலேசியா வாசுதேவனின் வாழ்க்கையை மாற்றிய சம்பவம்!…
ஆனால் சில காலம் முன்னர் நடிகைக்கு நடந்த பாலியல் அத்துமீறல் மலையாள சினிமாவையே உலுக்கியது. இதைத்தொடர்ந்து, ஹேமா கமிட்டி உருவாக்கப்பட்டது. பல நாள் விசாரணைக்கு பின்னர் அந்த அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அது வெளியிடப்படாமல் இருந்த நிலையில் சில விஷயங்கள் மட்டும் கசிந்து இருக்கிறது.
இதை தொடர்ந்து அம்மா என்னும் மலையாள நடிகர் சங்கத்தை சார்ந்த நிர்வாகிகள் பதவி விலகினர். இதைத்தொடர்ந்து நடிகைகள் தங்களது நடந்த பிரச்சனைகளை தொடர்ச்சியாக இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். இதில் பல பிரபல நடிகர்கள் சிக்கி இருப்பது தான் அதிர்ச்சியான தகவல்.
இதையும் படிங்க: ஆரம்பிச்சாச்சு லோகேஷின் எல்சியூ! ஆனா அதுல ஒரு சின்ன ட்விஸ்ட்.. கூலிதானே நினைக்கீங்க
அதற்கு பயந்து கொண்டே அவருடன் நடிக்க வந்த வாய்ப்புகளை மறுத்தேன். என்னைப் போன்ற சில நடிகைகளும் பயந்து கொண்டு அவருடன் நடிக்க மறுத்து வந்தனர். நான் மறுப்பு சொன்னவுடன் சினிமாவில் நடிக்க எனக்கு பல நாட்களாக வாய்ப்புகளே இல்லாமல் இருந்தது என குறிப்பிட்டு இருக்கிறார். தற்போது இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.