எஸ்.பி.பி பாடததால் கிடைத்த பாட்டு!.. மலேசியா வாசுதேவனின் வாழ்க்கையை மாற்றிய சம்பவம்!...
இளையராஜாவின் இசையில் பல பாடல்களை பாடியவர் மலேசியா வாசுதேவன். இவர் மலேசியாவில் செட்டிலான தமிழர். அதனால், மலேசியா அவரின் பேருக்கு முன்பு ஒட்டிக்கொண்டது. பதினாறு வயதினிலே படத்தில் கமல் பாடும் ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு’ பாடல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார்.
அதன்பின் இளையராஜாவின் இசையில் பல நூறு பாடல்களை பாடி இருக்கிறார். கமல், ரஜினிக்கு நிறைய பாடல்களை பாடி இருக்கிறார். அதிலும், ரஜினிக்கு இவரின் குரல் மிகவும் கச்சிதமாக பொருந்தும். மாவீரன் உள்ளிட்ட பல படங்களிலும் முழு பாடல்களையும் வாசுதேவனே பாடியிருந்தார்.
இதையும் படிங்க: விஜய்க்கு 275 கோடினா அஜித்துக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? அதிலும் ஒரு ரூல்ஸா?
அதேபோல், சிவாஜிக்கும் இவரின் குரல் கச்சிதமாக பொருந்தும். பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி நடித்து வெளியான முதல் மரியாதை படத்தில் வாசுதேவன் பாடிய அத்தனை பாடல்களுமே தேன் சொட்டும் பாடல்கள்தான். குறிப்பாக, ‘பூங்காத்து திரும்புமா’ என் பாட்டை விரும்புமா பாடல் இப்போதும் 70 கிட்ஸ்களின் ஃபேவரைட்டாக இருக்கிறது.
80,90களில் ரஜினிக்கு பல பாடல்களை வாசுதேவன் பாடியிருக்கிறார். இப்போது ரஜினியின் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படத்திலும் மலேசியா வாசுதேவனின் குரலை ஏஐ மூலம் கொண்டு வந்திருக்கிறார்கள். இது அவருக்கு செலுத்தும் அஞ்சலியாக பார்க்கப்படுகிறது. மலேசியா வாசுதேவன் பல படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார்.
இப்போது அவரின் மகன் யுகேந்திரன் சினிமாவில் பாடிக்கொண்டிருக்கிறார். நடித்தும் வருகிறார். இந்நிலையில், மலேசியா வாசுதேவன் ஊடகம் ஒன்றுக்கு கொடுத்த பேட்டி வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் ‘பதினாறு வயதினிலே படத்தில் ஒரு பாடல் எஸ்.பி.பி பாட வேண்டியிருந்தது. அவரும் ஸ்டுடியோவுக்கு வந்தார்.
ஆனால், அப்போது அவருக்கு தொண்டை கட்டியிருந்தது. எனவே, அவரால் பாடமுடியவிலை. அப்செட் ஆன பாரதிராஜாவும், இளையராஜாவும் யாரை பாட வைப்பது என யோசித்தார்கள். அப்போது நான் அங்கே இருந்ததால் எனக்கு அந்த வாய்ப்பை கொடுத்தார்கள். என்னிடம் ‘நீ கமலுக்கு பாடப்போகிறாய். இது உனக்கு ஒரு நல்ல வாய்ப்பு. நன்றாக பாடு’ என்றார்கள். அதுதான் ‘செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா’ பாடல். நான் பாடியது எல்லோருக்கும் திருப்தியாக இருந்தது.
அந்த பாடல் என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. இளையராஜா தொடர்ந்து எனக்கு வாய்ப்பு கொடுத்தார். எஸ்.பி.பிக்கு தொண்டை கட்டும்போதும், அவர் ஊரில் இல்லாத போதும் அவர் பாட வேண்டிய பாடல்களையும் நானே பாடினேன்’ என சொல்லியிருந்தார் மலேசியா வாசுதேவன்.
இதையும் படிங்க: ஹிட்டடித்தா சும்மா இருக்க மாட்டாங்களே… கேஜிஎஃப் கதையை கையில் எடுக்கும் தமிழ் சினிமா!..