ஆரம்பிச்சாச்சு லோகேஷின் எல்சியூ! ஆனா அதுல ஒரு சின்ன ட்விஸ்ட்.. கூலிதானே நினைக்கீங்க
Lokesh Kanagaraj: தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக இருப்பவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்தில் ஒரு மாபெரும் ஆளுமையாக மாறியிருக்கிறார். கிட்டத்தட்ட 5 படங்கள்தான். ஆனால் பேரு புகழ் கடலளவு. ரஜினி, விஜய், கமல், சூர்யா, கார்த்தி இவர்கள்தான் லோகேஷின் கதாநாயகர்கள். அவர்களை வைத்து தொடர்ந்து ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து ஒரு உச்சத்தை அடைந்திருக்கிறார்.
ரஜினியை வைத்து இப்போது கூலி படத்தை எடுத்து வருகிறார் லோகேஷ். லோகேஷ் படங்களை பொறுத்தவரைக்கும் எல்சியூ என்பதை ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். கைதியில் இருந்து விக்ரம் படம் வரை எல்சியூ கான்செப்ட் இருந்தது. அதுவே பெரிய ஹைப்பை ஏற்படுத்தியது. ஆனால் விக்ரம் படத்தில் தான் எல்சியூ நல்ல முறையில் வொர்க் அவுட் ஆனது.
இதையும் படிங்க: எஸ்.பி.பி பாடததால் கிடைத்த பாட்டு!.. மலேசியா வாசுதேவனின் வாழ்க்கையை மாற்றிய சம்பவம்!…
லியோ படத்திலும் எல்சியூ என்று சொன்னாலும் ஜார்ஜ் மரியானை மட்டும் காட்டிவிட்டு இதுதான் எல்சியூ என லோகேஷ் ஏமாற்றினார். அடுத்ததாக கூலி படத்திலும் எல்சியூ இருக்குமா என்று ரசிகர்கள் அனைவரும் கேள்வி கேட்டு வருகின்றனர். ஆனால் கூலி படம் ஆரம்பிக்கும் போதே இது என்னுடைய படமாகத்தான் இருக்கவேண்டும் என ரஜினி கறாராக சொல்லிவிட்டதாக ஒரு தகவல் வெளியானது.
அதனால் கண்டிப்பாக கூலி திரைப்படம் எல்சியூவில் வராது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் லோகேஷ் ஒரு படத்தை தயாரிக்க போகிறார். அந்தப் படத்தின் கதையையும் லோகேஷ்தான் எழுத இருக்கிறார். அதில் லாரன்ஸ்தான் ஹீரோ. பாக்யராஜ் கண்ணன் தான் படத்தை இயக்கப் போகிறார்.
இதையும் படிங்க: அஜித்தும் அரவிந்த்சாமியும் இந்த விஷயத்தில் ஸ்டிரிக்டா இருக்காங்க! ஃபாலோ பண்ணுங்கப்பா
இந்தப் படம் எல்சியூவில் வருவதற்கு வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. லோகேஷின் எழுத்தில் தயாரிப்பில் எனும் போது கண்டிப்பாக எல்சியூ டச் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே லோகேஷின் எல்சியூவில் லாரன்ஸ் வருவார் என்று முன்பே ஒரு செய்தி வெளியானது. அது ஒரு வேளை இந்தப் படத்தின் கதையாகத்தான் இருக்கும் என கூறுகிறார்கள்.