என்னடா கேமியோ? அஜித் படத்தில் அப்பவே கலக்கிய கமல் - தூசி தட்டி எடுத்தாச்சுல

by Rohini |
ajith
X

ajith

உலக சினிமா அரங்கில் பல்துறை நடிகராக விளங்கி வருபவர் நடிகர் கமல்ஹாசன். சினிமாவில் எல்லா துறைகளிலும் கால் பதித்த கமல் வளரும் இளம் தலைமுறை நடிகர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார். சினிமா தான் தன்னுடைய மூச்சு என்று வாழ்ந்து கொண்டு வரும் கமல் ஒரு என்சைக்ளோபீடியாவாகவே சினிமாவில் வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

பன்முக நடிகராக கமல்

இவர் கால் பதிக்காத எந்த துறையும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். சினிமாவில் இருக்கும் நுணுக்கங்களை நன்கு அறிந்தவர். புதுப்புது தொழில் நுட்பங்களை சினிமாவில் புகுத்தி அதன் மூலம் தமிழ் சினிமாவை மற்ற மொழி சினிமாக்களை விட வளர்ச்சி அடைய வைக்க வேண்டும் என்று நினைப்பவர்.

இதையும் படிங்க : அடுத்த இசை வாரிசுனு இளையராஜா சொன்னது சரிதான்! கார்த்திக்ராஜா இசையில் இவ்ளோ சூப்பரான பாடல்களா?

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்று சினிமாவும் தன்னுடைய அடுத்த கட்ட பரிணாமத்தை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கின்றது. புதுப்புது வார்த்தைகள் கொண்ட சினிமாக்களை இப்பொழுது நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்று சொல்கிறார்கள். கேமியோ என்று சொல்கிறார்கள். ஆனால் ஆழ்ந்து உற்று நோக்கி பார்த்தால் இதை அந்த காலத்திலேயே நம்முடைய நடிகர்கள் செய்து விட்டு போய் இருப்பார்கள்.

ajith1

ajith1

ஏன் செய்ய வேண்டும்

மேலும் ஒரு முன்னணி நடிகரை இன்னொரு நடிகரின் பாடலுக்காக பாட வைப்பது என்பது கிட்டத்தட்ட சாதாரண விஷயமாக இருக்காது. ஏனெனில் சில நடிகர்கள் நான் ஏன் அவருக்காக பாட வேண்டும் என நினைப்பதுண்டு. ஆனால் கமல் அப்படி செய்யவில்லை. அதுவும் பல பத்திரிகைகளில் ஏதோ கமலுக்கும் அஜித்திற்கும் செட் ஆகாது என்பதை பற்றி நிறைய எழுதி இருக்கிறார்கள்.

இதையும் படிங்க : அடுத்த படம் தளபதி கூடவா? புது அப்டேட் கொடுத்த அதிதி ஷங்கர்!..

ஆனால் அஜித் நடித்த உல்லாசம் திரைப்படத்தில் முத்தே முத்தம்மா என்ற பாடலை அஜித்திற்காக பின்னணி பாடியவர் கமல்தான். நடிப்பையும் தாண்டி உல்லாசம் படத்தில் கமல் குரல் கொடுத்த போது இன்னும் பெரிய புகழை பெற்றார். அந்தப் பாடலை சுவர்ணலதா மற்றும் பவதாரணி உடன் இணைந்து கமல் பாடி இருக்கிறார்.

ajith2

ajith2

தனுஷுக்குமா?

அந்தப் பாடல் சூப்பர் ஹிட் ஆனது அது மட்டுமில்லாமல் அந்த படத்தில் உள்ள அத்தனை பாடல்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதேபோன்று தனுஷ் நடித்த புதுப்பேட்டை படத்திலும் கமல் ஒரு பாடலை பாடியிருக்கிறார். அந்தப் படத்தில் நெருப்பு வாயிலில் என தொடங்கும் அந்தப் பாடலை பாடியவர் கமல் தான். பெரும்பாலும் கமல் அவர் நடித்த படத்தில் அமைந்த பாடல்களை தான் பாடுவதுண்டு. ஆனால் அஜித், தனுஷிற்காக கமல் இதை செய்திருக்கிறார்.

இதையும் படிங்க : இந்த கம்பெனியில எப்படியாவது நடிக்கணும்!.. ரஜினிக்கு இருந்த தீரா ஆசை.. அதுக்கு காரணம் இதுதான்!…

Next Story