அவரு தாடிய மாதிரி இப்போ எனக்கு மாறிக்கிட்டு வருது நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் நம்ம உலகநாயகன்
உலகநாயகன் என்று அவரை சொல்லும்போது இந்த பட்டத்தைப் பெற அவர் எவ்வளவு கடுமையாக உழைத்திருக்கிறார் என்பது கமல் சாரைப் பார்க்கும் போது தெரியும்.
கமல் தன் அண்ணனைப் பற்றி....
அதாவது என்னை வந்து பெத்துப் போட்டு தொப்புள் கொடி அறுத்ததும் பார்க்க வந்த இரண்டு இளைஞர்கள்ல மூத்த இளைஞர் சாருஹாசன். கூட சந்திரஹாசன் இருந்தாரு. அவருக்கு 18 வயசு. இவருக்கு 24 வயசு. அவங்க வந்து (அண்ணி) புள்ளத்தாச்சியா இருந்தாங்க. குழந்தை பெத்துருப்பாங்க.
அதுக்கு அப்புறம் தான் நான் பொறந்தேன்னு நினைக்கிறேன். அப்போலே இருந்து என்னைப் பார்த்துக்கிட்டு இருக்காரு. அவரு தாடி மாதிரி மாறிக்கிட்டு வருது என் தாடி. அது வரையிலும் பார்த்துக்கிட்டு இருக்காரு. ஆனா..என்னன்னா இந்தக் குடும்பத்தில சந்திரஹாசன் உள்பட நளினி உள்பட அவர் குழந்தைகள் உள்பட அத்தனை பேருக்கும் ஹீரோ இவரு. அப்படி இருக்குறது ரொம்ப கஷ்டம்.
கமலின் அண்ணன் சாருஹாசன் என்ன சொல்கிறார் என்பதைப் பார்க்கலாம்.
எங்கள் குடும்பத்தில் எங்க அப்பா சீனிவாசன் தான் சார்ப். அதற்கு இடையில் நாங்க எல்லாம் வரிசையா இருந்;தோம். அத்தனை பேருக்கு இடையில் அதே சார்ப்னஸ் வந்தது கமல் ஒரு ஆளுக்குத் தான்.
சாருஹாசனின் மனைவி சொல்வதைப் பாருங்கள்.
ரொம்ப ரொம்ப அளவுக்கு மீறி பெருமையா இருக்கு. நெஞ்சே வெடிச்சிரும்போல இருக்கு சந்தோஷத்துல. என்னைக்குமே அவன் உயரத்துல தான் இருந்தான். இப்ப ரொம்ப உயரத்துக்குப் போயிட்டான். ரொம்ப சந்தோஷமா இருக்கு. எங்களுக்கு கல்யாணம் ஆன உடன் தான் அவன் பிறந்தான். என் பிள்ளையா தான் நான் அவனை வளர்த்துருக்கேன். இன்னமும் பிள்ளையா தான் பார்க்கிறேன்.
கமல் தன் அண்ணியைப் (கோமளம்) பற்றி எவ்வாறு கூறுகிறார் என்பதைப் பார்ப்போம்.
அண்ணியா அம்மாவா இங்க எல்லாருக்கும் ஒரே கன்பியூஷன். அந்த டபுட் ஹாசினிக்கு மட்டுமல்ல. எனக்கும் உண்டு. அதுக்கு காரணம் அவங்களுடைய மூத்த குழந்தை தவறிவிட்டது. ஆமா...அந்த பாலையும் சேர்த்து குடிச்சி வளர்ந்தவன் நான். இது நிஜம். பாலூட்டிய தாய். இவங்க வந்து சீராட்டிய தாய்னு எல்லாம் சொல்வாங்க. ரெண்டும் செஞ்சாங்க இவங்க.
இன்னொரு சுவாரசியமான விஷயம். சாருஹாசனே பகிர்கிறார்.
அப்பா ஆங்கிலேய ஆட்சிக்கெதிரான போராட்டத்தில் தீவிரமாக இருந்தபோது அவருக்கு குரு யாகூப் ஹாசன். அவரது பெயரின் பிற்பாதியைத் தான் 3 பிள்ளைகளுக்கும் பெயர் வைத்துள்ளார் என்கிறார். அவர்கள் யார் என்றால் சந்திரஹாசன், சாருஹாசன், கமல்ஹாசன்.