ஏர்போட்டில் ராமராஜனிடம் கமல் செய்த காரியம்...ராதாரவி சொன்ன சுவாரஸ்ய சம்பவம்....

by சிவா |
kamal
X

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் ராமராஜன். ரசிகர்களை இவரை மக்கள் நாயகன் என அழைத்தனர். கிராமப்புற படங்களில் நடித்து பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர். இவர் நடித்த கரகாட்டக்காரன் திரைப்படம் சில திரையரங்குகளில் ஒரு வருடத்திற்கும் மேல் ஓடி சாதனை படைத்தது. இவரின் வெற்றியை கண்டு ரஜினி, கமலே பயந்த காலங்கள் உண்டு.

ramarajan

இதுவரை 44 திரைப்படங்கள் நடித்துள்ளார். அத்தனை படங்களிலும் ஹீரோவாக மட்டுமே நடித்தார். இவரின் நடிப்பில் மேதை என்கிற திரைப்படம் 2012ம் ஆண்டு வெளியானது. அதன்பின் அவர் எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. தற்போது சாமாயனியன் என்கிற புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இது ராமராஜனின் 45வது திரைப்படமாகும். இப்படத்தில் நடிகர் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர்.

இப்படத்தின் டீசர் வீடியோ வெளியீட்டு விழா 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய ராதாரவி சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

samaniyan

ராமராஜன் திரைப்படங்கள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த நேரம் ஒருமுறை விமான நிலையத்தில் ராமராஜனை கமல் சந்தித்துள்ளார். அப்போது அவரின் அருகில் சென்று அவரின் தலைமுடியை தொட்டு பார்த்துள்ளார். கமல் என்ன செய்கிறார் என்பதை புரியாமல் ராமராஜன் முழிக்க ‘இது உண்மையான முடியா இல்லை விக்கா என தொட்டுப் பார்த்தேன். எப்படி முடி கலையாமல் நடிக்கிறீர்கள்?’ என கிண்டலடித்து விட்டு சென்றாராம்.

kamal1_cine

ராமராஜனின் ‘கரகாட்டக்காரன்’ படத்தின் வெற்றியை கண்டு கமல், ரஜினியே ‘இனிமேல் நமக்கு மார்க்கெட் இருக்குமா’ என பயந்தனர் எனவும் ராதாரவி தெரிவித்தார்.

Next Story