ஓவரா ஆசைபட்டு கடைசில பாலசந்தரிடம் பல்பு வாங்கிய கமல்… அட இப்படி ஒரு சம்பவம் கூட நடந்துருக்கா?…

Published on: November 26, 2023
kamalhaasan
---Advertisement---

Actor kamalhaasan: தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக கருதப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கமல். என்னதான் குழந்தை நட்சத்திரமாக இருந்தாலும் இப்படத்தில் இவரின் நடிப்பு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

பின் இவர் பார்த்தால் பசி தீரும், பாத காணிக்கை போன்ற திரைப்படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துவந்தார். பின் 7 ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி இருந்த கமல்ஹாசன் மாணவன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார்.

இதையும் வாசிங்க:படப்பிடிப்பில் யார் கூப்பிட்டும் நடிக்க வராத ரகுவரன்!. அதுக்கு அவர் சொன்ன காரணம் இருக்கே!…

இதன் பின் பல திரைப்படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார் கமல்ஹாசன். கமலுக்கு சினிமாவில் இயக்குனராக வர வேண்டும் என்பதே முதலில் விருப்பமாக இருந்துள்ளது. அப்படிபட்ட ஒரு சம்பவமும் நடந்துள்ளது.

இயக்குனர் கே.பாலசந்தர் இயக்கத்தில் 1973ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் அரங்கேற்றம். இத்திரைப்படத்தில் சிவக்குமார், பிரமிளா, கமல்ஹாசன் போன்ற நட்சத்திரங்களும் நடித்திருந்தனர். சிவக்குமாருக்கும் இப்படமே தமிழ் சினிமாவில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி தந்தது.

இதையும் வாசிங்க:உண்மையிலேயே சகலகலாவல்லவன்தான்! கமல் வாங்கிய தேசிய விருதுகள் எத்தனை தெரியுமா?

ஒரு முறை ஜெமினிகணேசன் கமல்ஹாசனை சினிமாவில் நடிக்க வைத்து கொள்ளுமாறு பாலசந்தரிடம் கூறியிருந்தாராம். பாலசந்தர் இப்படத்தில் பிரமிளாவின் தம்பி கதாபாத்திரத்தில் நடிக்க கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்தாராம். ஆனால் என்ன கதாபாத்திரம் என முதலில் கூறவில்லையாம். கமலும் இந்த செய்தி கேட்டதும் தன்னை உதவி இயக்குனராக பணியாற்றதான் அழைத்துள்ளார் என ஆசையாய் வந்தாராம்.

ஆனால் பாலசந்தரோ பிரமிளாவின் தம்பி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாராம். கமலுக்கோ அதற்கு என்ன சொல்ல என தெரியவில்லையாம். முகமே மாறிவிட்டதாம். அதை கவனித்த பாலசந்தர் இஷ்டம் இருந்தால் நடி… இல்லைனா கிளம்பு… என கூறிவிட்டாராம். ஆனாலும் பாலசந்தர் கூறியதால் அதில் மறுப்பு தெரிவிக்காமல் கமலும் நடித்து கொடுத்துவிட்டாராம்.

இதையும் வாசிங்க:அமீருக்கு ஆதரவாக களமிறங்கிய சசிகுமார்..! என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா? சூர்யா தரப்பு இப்போவாது பேசுமா?

amutha raja

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.