Connect with us

Cinema History

அந்த சீனுக்கு ஒரு கோடி கேட்டாங்க.. காசில்லாததால் நானே பண்ணுனேன்- கமல் எடுத்த ரிஸ்க்!.

ஒவ்வொரு திரைப்படத்திற்கு முடிந்தவரை தனது நடிப்பை சிறப்பாக கொடுக்க நினைக்கும் தமிழ் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் கமல்ஹாசன்.

கமல்ஹாசன் நடித்த பல திரைப்படங்கள் அவரது நடிப்பை பெரிதாக வெளிக்காட்டியுள்ளன. வியாபார ரீதியான படங்கள் என்பதை தாண்டி தனது மனதுக்கு பிடித்தமான கதைகளை படமாக்குவதற்கு அதிகமாக மெனக்கெடுவார் கமல்ஹாசன்.

அப்படி கமல்ஹாசனின் கனவு படமாக இருந்த படம் மருதநாயகம். விடுதலைக்கு முந்தைய இந்தியாவில் நிஜமாக வாழ்ந்த மனிதரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இந்த படம் தயாரானது. ஆனால் அந்த படம் முழுமை பெறவே இல்லை.

அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த காலக்கட்டத்தில் படத்திற்காக வெகுவாக உழைத்தார் கமல்ஹாசன். படத்தில் ஒரு காட்சியில் அவரது காலில் அம்பு குத்தியிருக்கும். அதை ஒரு கழுகு கொத்தி எடுக்கும். மருதநாயகன் எடுத்த காலக்கட்டத்தில் கிராபிக்ஸ் செய்வதற்கு அதிக செலவாகும் என்பதால் அதற்காக வெளிநாட்டில் இருந்து ஒரு கழுகை கொண்டு வந்தனர்.

கமல் எடுத்த ரிஸ்க்:

அதற்கு ஒரு மாதம் பயிற்சி கொடுத்து அந்த காட்சியை படமாக்கினர். அதே போல ஜல்லிக்கட்டு காளை மீது ஏறி அமர்ந்து கமல் போவது போன்ற காட்சி அந்த படத்தில் இடம் பெறும். அதில் ரிஸ்க் அதிகம் என்பதால் அந்த காட்சியை கிராபிக்ஸ் செய்யலாம் என முடிவெடுத்தனர்.

ஆனால் தொழில்நுட்பவியலாளர்கள் அந்த காட்சியை கிராபிக்ஸ் செய்ய 1 கோடி ரூபாய் கேட்டுள்ளனர். அப்போது அந்தளவிற்கு கமலிடம் பட்ஜெட் இல்லை. எனவே பல பயிற்சிகளை மேற்கொண்டு அவரே ஜல்லிக்கட்டு காளை மீது ஏறி பயணம் செய்து அதை படம் பிடித்தனர்.

ஒரு பேட்டியில் பேசும்போது இந்த நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்

இதையும் படிங்க: ஜாலியா பண்ணலாம்னு சொல்லி காலி பண்ணிட்டார்.. சொப்பன சுந்தரி படப்பிடிப்பில் நடந்த சம்பவம்!..

google news
Continue Reading

More in Cinema History

To Top