விஜய் இடத்துக்குப் போட்டி போடும் பிரபலம் யார்? தளபதி 69 பட அப்டேட் இதுதான்..!
விஜய் அரசியலில் களம் இறங்குகிறேன். 2026 சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். தற்போதே இதுதான் கடைசி படம் என்று விஜய் நடித்து வருகிறார். வெங்கட்பிரபு நடித்து வரும் கோட் படத்தைத் தான் அவர் தனது கடைசி படம் என்றார்.
இப்போது தளபதி 69ம் வர உள்ளதாம். அதன்பிறகு முழுநேர அரசியலில் களம் காண்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள் விஜயின் இடத்தைப் பிடிக்க போட்டிப் போட்டு வருகிறார்கள். அவர்கள் யார் என்று இங்கு பார்ப்போம்.
விஜயை விட சூர்யா அதிகமா செலவு பண்றாரு. வருஷத்துக்கு 5 கோடி ரூபா வரைக்கும் மாணவர்களுக்காக சூர்யா செலவு பண்ணிக்கிட்டு இருக்காரு. நாம் அஜித் ரேஞ்ச் என்ற கற்பனையில் சூர்யா இருக்கிறார்.
விஜய் கட்சி ஆரம்பித்ததும் சிவகார்த்திகேயன் அவரைப் போலவே கல்யாண மண்டபத்தைப் பிடித்து ரசிகர்களை எல்லாம் சந்திக்கிறார். அதுமட்டும் அல்லாமல் விஜய் பட இயக்குனர்களைத் தேடிப் பிடித்து தன் படத்தையும் இயக்கச் செய்கிறாராம். விஜய் அரசியலுக்கு வந்தாலும் அவருக்கு 2026ல் தோல்வி தான் பரிசாகக் கிடைக்கும்.
ஸ்டார் படத்தில் வரும் கவின் பேட்டி கொடுக்கும் போது விஜயைப் போலவே நடை, உடை, பாவனை எல்லாம் இருந்து வருகிறது. கவினைப் பொருத்த வரை சிறந்த நடிகர் தான். அவர் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடம் நடந்து கொள்ளும் முறை திருப்திகரமாக இல்லை.
அவரது ஸ்டார் படம் பெரிதாகப் போகவில்லை. அந்தத் தயாரிப்பாளர் படத்தின் மீதுள்ள நம்பிக்கையில் அந்தப் பட இயக்குனருக்கு நிலத்தைப் பரிசாகக் கொடுத்தாராம். ஆனால் படத்தின் ரிசல்ட் படி போட்ட பணத்தை எடுக்க முடியுமா என்ற அளவில் தான் உள்ளதாம்.
கார்த்திக் சுப்புராஜ் விஜயை வைத்து 2 தடவை கதை சொன்னேன். ஆனால் அவருக்குக் கதை பிடிச்சது. ஆனால் எந்த அளவுக்கு எனக்கு அது பொருத்தமாகும் என்று எனக்குத் தெரியவில்லை. அடுத்தும் விஜய்க்கு 69க்காகக் கதை சொன்னாராம்.
தளபதி 69 க்கு H.வினோத் தான் டைரக்டர். தயாரிப்பாளர் கேவிஎன் புரொடக்ஷன்ஸ். விஜய் கேட்குற சம்பளத்தைக் கொடுப்பதற்கு இங்குள்ளவர்கள் தயாராக இல்லை. அதனால் தான் தெலுங்கு, கன்னட தயாரிப்பாளர்கள் அவரை வைத்துப் படம் எடுக்கிறார்கள்.
மேற்கண்ட தகவலை வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார்.