ஜெமினிகணேசனை அந்தக் காலத்தில் காதல் மன்னன் என்று சொல்வார்கள். படத்தில் டை கட்டி நடிக்கும் போது அச்சு அசல் அவர் பெரிய ஆபீசர் மாதிரியே இருப்பார். உலகநாயகன் கமலுக்கு பாலசந்தரிடம் அழைத்துப் போய் சினிமா வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தவரும் இவர் தான். இவரைப் பற்றி கமல் ஒரு முறை இவ்வாறு பேசினார்.
நான் சந்தித்த முதல் சினிமா நடிகர் ஜெமினிகணேசன் தான். அப்போது எனக்கு மூன்றரை வயது. அவர் ஒரு சினிமா நடிகர் என்று என்னை அழைத்துச் சென்றார்கள். ஆனால் அவரே என்னைப் பார்த்த உடனே தூக்கிக் கொஞ்ச ஆரம்பித்து விட்டார். ஆனால் நானோ ஜெமினிகணேசனைப் பார்த்ததே இல்லை. அதனால் அவர் தான் ஜெமினி கணேசன் என்றே எனக்குத் தெரியாது. இவர் வேறு யாரோ என்று நினைத்துக் கொண்டேன். அதன்பிறகு தான் தெரிந்தது. சாவித்திரி அம்மா ஓடி வந்தாங்க. இது யாரு என்று என்னைக் கொஞ்சினாங்க. நான் அவரை மாமான்னு தான் அழைப்பேன்.
என் கூட யதார்த்தமா விளையாடிக் கொண்டே எனக்கு பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தது அவர் தான். நான் டை கட்ட ஆரம்பித்ததே அவரால் தான். வேட்டியே கட்டத் தெரியாத எனக்கு அதை சொல்லிக் கொடுத்தது அவர் தான்.
அதே போல அன்னை வேளாங்கன்னி படத்தில் துணை இயக்குனராக வேலை பார்த்தேன். அப்போது என்னிடம் அவரே வந்து பேசினார். நீ தானே அது என்றார். ‘இங்கே என்ன பண்ணிக்கிட்டு இருக்கே’ன்னு கேட்டார். அசிஸ்டண்ட் டைரக்டர்னு சொன்னேன். இதுக்காடா நீ வந்தேன்னு கேட்டார். உடனே காரில் அழைத்துச் சென்று பக்கத்து ஸ்டூடியோவுக்குப் போனார். அங்கு வேற ஒரு இயக்குனரிடம் அறிமுகப்படுத்தினார். ‘இந்தப் பையன் நடிக்கணும்’ என்றார்.
அந்த இயக்குனர் ‘இந்த பையன் நடிக்கணும்னு ஆசைப்படுறானா?’ன்னு கேட்டார். ‘இல்ல நான் ஆசைப்படுறே’ன்னு ஜெமினிகணேன் சொன்னார். அதை என்னால் மறக்கவே முடியாது. அவர் என்னை எந்த இயக்குனரிடம் அழைத்துக் கொண்டு போனார் தெரியுமா? அவர் தான் கே.பாலசந்தர்’ என கமல் கூறியிருந்தார்.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…