Connect with us

இவர்தான் இளையராஜான்னு எனக்குத் தெரியாது! – கமல் இப்படி சொல்ல காரணம் இதுதான்…

Cinema History

இவர்தான் இளையராஜான்னு எனக்குத் தெரியாது! – கமல் இப்படி சொல்ல காரணம் இதுதான்…

2017ல் இளையராஜாவுக்கு விகடன் விருது வழங்கும் விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் எஸ்.எஸ்.வாசன் பெயரில் இந்த விருது இசைஞானி இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது. அப்போது உலகநாயகன் கமல் இளையராஜாவுக்கு இந்த விருதை வழங்குகிறார்.

திரை இசையில் நாட்டுப்புற இசையைக் கலந்தவர் இளையராஜா தான். 1976ல் அன்னக்கிளி என்ற படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் அழுத்தமாகக் காலடி தடம் பதித்தார்.

ilaiyaraja

அப்போது கமல் இளையராஜாவுக்கு விகடனின் விருதை வழங்குகிறார். அப்போது இது எனது வாழ்க்கைக்கு கிடைத்த மாதிரி இருக்கு என்கிறார். அப்போது இளையராஜா மாதிரியா எனக் கேட்கிறார். மாதிரி தான் இருக்கு. ஏன்னா உங்களது அது. நான் எவ்வளவு தான் சொந்தம் கொண்டாட முடியும் என சிரித்துக் கொண்டே சொல்கிறார் கமல். இது உங்களுக்கு. தமிழர்களிடம் இருந்து வந்த விருது. ஆனந்த விகடன் அதை முந்திக்கொண்டு தருகிறது.

அப்போது இளையராஜா இது மறுத்திருக்க வேண்டிய ஒன்று. ஏன்னா லைப் டைம் அக்சீவ்மென்ட் விருதுன்னா நான் வாங்க மாட்டேன். எனக்குத் தான் லைப் இருக்குதே. முடியலையே. முடியுமா? முடியுமா என இளையராஜா பார்வையாளர்களைப் பார்த்து மீண்டும் கேட்கிறார். உடனே கமல் அதனால் தான் அந்த விருதுக்கு அந்தப் பெயர் வைக்காம ஐயா வாசனோட பேர வைச்சிருக்காங்க என்கிறார் கமல்.

அந்தப் பேர வைச்ச உடனே எனக்கு ஜெமினி ஸ்டூடியோவில மியூசிக் அமைச்ச நாட்கள் எல்லாம் நினைவுக்கு வருது. உங்களுக்கு என கமலைப் பார்த்துக் கேட்கிறார். எனக்கும் தான். உங்கள யாருன்னே எனக்குத் தெரியாது. அப்போம். உங்க சகோதரரத்தான் நெனைச்சிக்கிட்டு இருக்கேன்.

இவருதான் இசை அமைப்பாளர்ர் ஆகி இளையராஜாவா ஆகிட்டார்னு நெனைச்சிக்கிட்டு இருக்கேன். அப்புறம் ஒரு பங்ஷன்ல கூப்பிடுறாங்க. அன்னக்கிளி பங்ஷன் அது. அப்போ இவரத் தேடிக்கிட்டு இருக்கேன். என்ன அமரன் எந்திரிக்காம உக்காந்துக்கிட்டே இருக்காருன்னு அப்புறம் பார்த்தா…இவரு தான் இளையராஜான்னு எனக்கு மட்டுமல்ல. தமிழகத்துக்கே அப்போ தான் தெரிஞ்சது. அவ்ளோ அமைதியா இருப்பாரு. இவருக்கு அடையாளமே இவரது தொழில், கலை, திறமை.

அதை நான் வந்து ஜெமினி ஸ்டூடியோவுல மட்டும் பார்க்கல. உதாபெஸ்ட்டுக்குப் போயி இவரு யாருமே தெரியாம இருந்த நேரத்துல இவரோட இசையை வாசிச்ச உடனே இங்கே எப்படி மரியாதைக் கொடுப்பாங்களோ அதே மரியாதையை அங்கேயும் கொடுக்கப்படுவதை நான் பார்த்திருக்கேன். அது அவர் பேசும் மொழி உலக மொழி. உலக பாஷை.

kamal ilaiyaraja in vikadan award 2017

அது அப்போ எனக்குப் புரிஞ்சிடுச்சு. அந்த மாதிரி உலகக் கலைஞனைப் பாராட்டும் ஒரு ரசிகனாக நான் இங்கே நிற்பதனால் நான் பெருமை கொள்கிறேன். ஒரு பர்ஸ்ட் ரோ ரசிகன் நான்…இவருக்கு…நான் எப்படி ரசிகன்னா வேற படத்துக்கு இவரு இசை அமைச்சி க்கிட்டு இருக்கறபோது அந்தத் தளத்துக்குப் போய் நான் வேடிக்கை பார்க்கிற அளவுக்கு ரசிகன். என்றார் கமல்.

கம்போசிங்ல இருக்கறப்ப..வேற வேற பாட்டெல்லாம் வரிசையா இவரு சொல்லிட்டுப் போவாரு என இளையராஜா கமலைப் பார்த்து சொல்ல, இதை ஏன் எனக்குப் போடலன்னு சண்டை எல்லாம் போட்டுருக்கேன் என கமல் சிரிக்கிறார்.

ராஜா அவர்கள் பார்க்க நினைத்த அந்த ரெக்கார்டிங் ஸ்டூடியோவான ஜெமினி ஸ்டூடியோவப் பார்க்கணும்னு யாராவது ஆசைப்பட்டீங்கன்னா ஒரு இடத்துல பார்க்கலாம். அது ராஜபார்வை படத்தில நீங்க பார்த்தீங்கன்னா உங்களுக்கும் ராஜபார்வை வரும். அந்தக் கட்டடத்தை இடிக்கற மாதிரி ஒரு கனவு வரும். அந்த கட்டடத்தை இடிக்கப் போறதுன்னு தெரிஞ்ச உடனே அவசரப்பட்டு எங்கள் படத்தின் முதல் காட்சி. மியூஸிஷியன் வாசிக்கற மாதிரி ஒரு காட்சி வரும். அந்தக்காட்சியைப் படத்துல நாங்க பதிவு செய்து வச்சிருக்கிறோம். நாங்க பார்த்தக் காட்சி எல்லாம் ஒரு கனவு மாதிரி இல்லாம நினைவாக நீங்கள் பார்ப்பதற்கு இருக்கிறது.

அது ஐயா வாசன் அவர்களுக்கு நாங்க வச்ச சின்ன சலாம். அந்த நிகழ்ச்சியில் இளையராஜா கமலிடம் நான் உங்கக்கிட்ட கேட்கறதுக்கு நிறைய கேள்வி இருக்கு. உங்க முன்னாடி கேட்கலாமான்னு தெரிலன்னு ரசிகர்களைப் பார்த்து இளையராஜா கேட்க…கேளுங்க என கோரஸ் ஒலிக்கிறது. நாளைக்கு எதாவது பிரச்சனை ஆயிடுச்சுன்னா என்றவாறே… இளையராஜா பார்க்க…கேளுங்க என கமல் சிரிக்கிறார்.

நான் உங்களுக்கு சகோதரன். நீங்க என்ன எப்படி நினைக்கிறீங்க…நான் வந்து இப்ப உங்கக் கிட்ட ரெண்டு உருவம் தெரிது. ஜெமினி மாதிரி. ஒண்ணு சந்திரஹாசன்…இன்னொன்னு இளையராஜா. அப்போ எதுக்கு எங்கிட்ட சொல்லாம அரசியல் ஆரம்பிச்சீங்கன்னு கேட்கிறார்.

என்னை முதன் முதலா அரசியலுக்கு நீங்க வந்தே ஆகணும்னு சொன்னது யார்? நான் சொல்லட்டுமா…நீங்களே சொல்றீங்களா? என கமல் கேட்க…அதையும் நானே தான் சொல்லணுமா என இளையராஜா சிரிக்க…இவருதான் என கை நீட்டி சொல்கிறார் கமல்.

கமல் அரசியலில் மக்களை சந்திக்கப் போவதற்காக மேற்கொண்ட யாத்திரையை ஆரம்பித்த நேரமும் இதுதான்.

இவர் தான் இளையராஜான்னு எனக்குத் தெரியாது கமல் இப்படி சொல்ல காரணம் இதுதான்…

2017ல் இளையராஜாவுக்கு விகடன் விருது வழங்கும் விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் எஸ்.எஸ்.வாசன் பெயரில் இந்த விருது இசைஞானி இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது. அப்போது உலகநாயகன் கமல் இளையராஜாவுக்கு இந்த விருதை வழங்குகிறார்.

திரை இசையில் நாட்டுப்புற இசையைக் கலந்தவர் இளையராஜா தான். 1976ல் அன்னக்கிளி என்ற படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் அழுத்தமாகக் காலடி தடம் பதித்தார்.

அப்போது கமல் இளையராஜாவுக்கு விகடனின் விருதை வழங்குகிறார். அப்போது இது எனது வாழ்க்கைக்கு கிடைத்த மாதிரி இருக்கு என்கிறார். அப்போது இளையராஜா மாதிரியா எனக் கேட்கிறார். மாதிரி தான் இருக்கு. ஏன்னா உங்களது அது. நான் எவ்வளவு தான் சொந்தம் கொண்டாட முடியும் என சிரித்துக் கொண்டே சொல்கிறார் கமல். இது உங்களுக்கு. தமிழர்களிடம் இருந்து வந்த விருது. ஆனந்த விகடன் அதை முந்திக்கொண்டு தருகிறது. அப்போது இளையராஜா இது மறுத்திருக்க வேண்டிய ஒன்று. ஏன்னா லைப் டைம் அக்சீவ்மென்ட் விருதுன்னா நான் வாங்க மாட்டேன். எனக்குத் தான் லைப் இருக்குதே. முடியலையே. முடியுமா? முடியுமா என இளையராஜா பார்வையாளர்களைப் பார்த்து மீண்டும் கேட்கிறார். உடனே கமல் அதனால் தான் அந்த விருதுக்கு அந்தப் பெயர் வைக்காம ஐயா வாசனோட பேர வைச்சிருக்காங்க என்கிறார் கமல்.

அந்தப் பேர வைச்ச உடனே எனக்கு ஜெமினி ஸ்டூடியோவில மியூசிக் அமைச்ச நாட்கள் எல்லாம் நினைவுக்கு வருது. உங்களுக்கு என கமலைப் பார்த்துக் கேட்கிறார். எனக்கும் தான். உங்கள யாருன்னே எனக்குத் தெரியாது. அப்போம். உங்க சகோதரரத்தான் நெனைச்சிக்கிட்டு இருக்கேன். இவருதான் இசை அமைப்பாளர்ர் ஆகி இளையராஜாவா ஆகிட்டார்னு நெனைச்சிக்கிட்டு இருக்கேன். அப்புறம் ஒரு பங்ஷன்ல கூப்பிடுறாங்க. அன்னக்கிளி பங்ஷன் அது. அப்போ இவரத் தேடிக்கிட்டு இருக்கேன். என்ன அமரன் எந்திரிக்காம உக்காந்துக்கிட்டே இருக்காருன்னு அப்புறம் பார்த்தா…இவரு தான் இளையராஜான்னு எனக்கு மட்டுமல்ல. தமிழகத்துக்கே அப்போ தான் தெரிஞ்சது. அவ்ளோ அமைதியா இருப்பாரு. இவருக்கு அடையாளமே இவரது தொழில், கலை, திறமை.

அதை நான் வந்து ஜெமினி ஸ்டூடியோவுல மட்டும் பார்க்கல. உதாபெஸ்ட்டுக்குப் போயி இவரு யாருமே தெரியாம இருந்த நேரத்துல இவரோட இசையை வாசிச்ச உடனே இங்கே எப்படி மரியாதைக் கொடுப்பாங்களோ அதே மரியாதையை அங்கேயும் கொடுக்கப்படுவதை நான் பார்த்திருக்கேன். அது அவர் பேசும் மொழி உலக மொழி. உலக பாஷை. அது அப்போ எனக்குப் புரிஞ்சிடுச்சு. அந்த மாதிரி உலகக் கலைஞனைப் பாராட்டும் ஒரு ரசிகனாக நான் இங்கே நிற்பதனால் நான் பெருமை கொள்கிறேன். ஒரு பர்ஸ்ட் ரோ ரசிகன் நான்…இவருக்கு…நான் எப்படி ரசிகன்னா வேற படத்துக்கு இவரு இசை அமைச்சி க்கிட்டு இருக்கறபோது அந்தத் தளத்துக்குப் போய் நான் வேடிக்கை பார்க்கிற அளவுக்கு ரசிகன். என்றார் கமல். கம்போசிங்ல இருக்கறப்ப..வேற வேற பாட்டெல்லாம் வரிசையா இவரு சொல்லிட்டுப் போவாரு என இளையராஜா கமலைப் பார்த்து சொல்ல, இதை ஏன் எனக்குப் போடலன்னு சண்டை எல்லாம் போட்டுருக்கேன் என கமல் சிரிக்கிறார்.

ராஜா அவர்கள் பார்க்க நினைத்த அந்த ரெக்கார்டிங் ஸ்டூடியோவான ஜெமினி ஸ்டூடியோவப் பார்க்கணும்னு யாராவது ஆசைப்பட்டீங்கன்னா ஒரு இடத்துல பார்க்கலாம். அது ராஜபார்வை படத்தில நீங்க பார்த்தீங்கன்னா உங்களுக்கும் ராஜபார்வை வரும். அந்தக் கட்டடத்தை இடிக்கற மாதிரி ஒரு கனவு வரும். அந்த கட்டடத்தை இடிக்கப் போறதுன்னு தெரிஞ்ச உடனே அவசரப்பட்டு எங்கள் படத்தின் முதல் காட்சி. மியூஸிஷியன் வாசிக்கற மாதிரி ஒரு காட்சி வரும். அந்தக்காட்சியைப் படத்துல நாங்க பதிவு செய்து வச்சிருக்கிறோம். நாங்க பார்த்தக் காட்சி எல்லாம் ஒரு கனவு மாதிரி இல்லாம நினைவாக நீங்கள் பார்ப்பதற்கு இருக்கிறது.

அது ஐயா வாசன் அவர்களுக்கு நாங்க வச்ச சின்ன சலாம். அந்த நிகழ்ச்சியில் இளையராஜா கமலிடம் நான் உங்கக்கிட்ட கேட்கறதுக்கு நிறைய கேள்வி இருக்கு. உங்க முன்னாடி கேட்கலாமான்னு தெரிலன்னு ரசிகர்களைப் பார்த்து இளையராஜா கேட்க…கேளுங்க என கோரஸ் ஒலிக்கிறது. நாளைக்கு எதாவது பிரச்சனை ஆயிடுச்சுன்னா என்றவாறே… இளையராஜா பார்க்க…கேளுங்க என கமல் சிரிக்கிறார்.
நான் உங்களுக்கு சகோதரன். நீங்க என்ன எப்படி நினைக்கிறீங்க…நான் வந்து இப்ப உங்கக் கிட்ட ரெண்டு உருவம் தெரிது. ஜெமினி மாதிரி. ஒண்ணு சந்திரஹாசன்…இன்னொன்னு இளையராஜா. அப்போ எதுக்கு எங்கிட்ட சொல்லாம அரசியல் ஆரம்பிச்சீங்கன்னு கேட்கிறார். என்னை முதன் முதலா அரசியலுக்கு நீங்க வந்தே ஆகணும்னு சொன்னது யார்? நான் சொல்லட்டுமா…நீங்களே சொல்றீங்களா? என கமல் கேட்க…அதையும் நானே தான் சொல்லணுமா என இளையராஜா சிரிக்க…இவருதான் என கை நீட்டி சொல்கிறார் கமல்.

கமல் அரசியலில் மக்களை சந்திக்கப் போவதற்காக மேற்கொண்ட யாத்திரையை ஆரம்பித்த நேரமும் இதுதான்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top