முதன் முறையாக ரஜினியை ஃபாலோ செய்யும் கமல்.! அடுத்த படத்தில் ரெம்ப பழைய யுக்தி.!

by Manikandan |   ( Updated:2022-02-15 13:19:13  )
முதன் முறையாக ரஜினியை ஃபாலோ செய்யும் கமல்.! அடுத்த படத்தில் ரெம்ப பழைய யுக்தி.!
X

சினிமா நடிகர்கள் பெரும்பாலானோர் தனது ஆரம்ப காலகட்டங்களில் இருந்தே தனது படங்களில் வரும் ரிஸ்கியான ஷாட்களுக்கு டூப் நடிகர்களை பயன்படுவார்கள். அதாவது கடினமான காட்சிகளில் நாயகர்களுக்கு ஏதேனும் நடந்துவிட்டால் அவரை நம்பி பணம் போட்ட பலருக்கு சிக்கலாகி விடும் என்பதால் இதனை செய்து வந்தனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த தனது உடல் நிலை கருதி வெகு வருடங்களுக்கு முன்பிருந்தே தனது படங்களில் டூப் பயன்படுத்தி வந்தார். அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு யாரும் அதனை பெரிதாக விமர்சிப்பது கூட இல்லை.

இதையும் படியுங்களேன் -சூப்பர் ஸ்டார் ரஜினிகிட்ட இருக்குற ஒரு கெட்ட பழக்கம் இதுதான்.!

ஆனால், கமல்ஹாசன் அப்படி இல்லை. தனது படத்தில் எவ்வளவு ரிஸ்கியான சண்டை காட்சி என்றாலும் அவரே நடிப்பார். அதில் பல அடிகள், காயங்கள், ஆபரேஷன் என நிறைய கண்டுவிட்ட்டார். விஸ்வரூபம் படத்தில் கூட அவர் நடித்த ரிஸ்கியான சண்டை காட்சிகளின் மேக்கிங் வீடியோ வெளியாகி அவரது அர்ப்பணிப்பு இந்த வயதிலும் குறையவிலையே என திரை பிரபலங்கள் வியந்து பாராட்டினர்.

ஆனால், அவரும் மனிதன் தான் வயதாக தானே செய்யும். தற்போது, நடித்து வரும் விக்ரம் படத்தில் கடினமான சண்டை காட்சிகளுக்கு கமல் டூப் பயன்படுத்தி வருகிறாராம். திரையுலகில் தற்போதும் பலருக்கு முன்னோடியாக இருக்கும் கமல், முதன் முறையாக ரஜினியை ஃபாலோ செய்து டூப் பயன்படுத்தி வருகிறாராம்.

Next Story